இந்தியாவில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அதற்கும் மேலானது, ஒவ்வொரு தெரு, வீடு மற்றும் தேநீர் கடைகளில் மக்களை ஒன்றிணைக்கும் ஒரு உணர்வு. அடுத்து என்ன நடக்குமென்பதை கணிப்பதில் துவங்கி, அம்பயரின் முடிவுகளை விவாதிப்பது வரை, ஒவ்வொரு இந்தியரும் தங்களை ஒரு கிரிக்கெட் நிபுணராகவே கருதுகிறார்கள்.
இந்த ஆர்வத்தை ஊக்குவிக்கும் விதமாக பலராலும் பெரிதும் விரும்பப்பட்ட 4வது அம்பயர் போட்டியின் 2-வது சீசனை பிரிட்டானியா 5050 மீண்டும் துவங்கியுள்ளது. இம்முறை, ஆக்ஷன் அனைத்தும் 5050கிரிக்கெட் டாட் இன் என்கிற ஒரு புதிய டிஜிட்டல் தளத்திற்கு நகர்ந்துள்ளது. ரசிகர்கள் தங்களது கிரிக்கெட் பொழுதுபோக்கினை மகிழ்ச்சியாக கொண்டாடவும், அவர்களின் உள்ளுணர்வுகள் நடக்குமா என்பதை பரிசோதிக்கும் வாய்ப்பும் அவர்களுக்கு கிடைக்கும்.
சச்பேங்க் நிறுவனத்தினால் கருத்தாக்கம் செய்யப்பட்ட பிரிட்டானியா 5050 4வது அம்பயர் முன்முயற்சியானது - ரசிகர்களை ஒரு அம்பயரின் இடத்தில் இருக்க அனுமதிக்கிறது; ஏனெனில் அவர்கள் கிரிகெட் போட்டியின் தனித்துவமான சூழ்நிலைகளை கவனித்து அடுத்து என்ன நடக்கும் என்பதைக் கணிக்கிறார்கள். சரியான கணிப்புகளின் மூலம் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகள், கேஷ்பேக் மற்றும் பல அற்புதமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பு அவர்களுக்கு உள்ளன. இந்த பிரச்சாரத்திற்கான புதிய தொலைக்காட்சி விளம்பரங்கள் இந்த யோசனையை ஒரு வேடிக்கையான திருப்பத்துடன் காட்சிகளுக்கு உயிரூட்டுகின்றன.
பிரிட்டானியா நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவின் பொது மேலாளர் சித்தார்த் குப்தா இதுபற்றி பேசுகையில், “இந்தியாவில் கிரிக்கெட் என்பது எப்போதுமே உணர்வோடு கலந்த ஒன்றாகும். ஒவ்வொரு ரசிகருக்கும் ஒரு கருத்து, ஒரு கணிப்பு, ஒரு கண்ணோட்டம் இருக்கும். பிரிட்டானியா 5050-யின் 4வது அம்பயர் முன்னெடுப்பின் மூலம், ரசிகர்களுக்கு அம்பயராக இருக்க நாங்கள் வாய்ப்பளிக்கிறோம்; அதாவது தனித்துவமான போட்டி சூழ்நிலைகள் எப்படி முடியும் என்பதை அவர்களைக் கணிக்குமாறு கேட்கிறோம். ஒவ்வொரு இந்தியரிடமும் உள்ள கிரிக்கெட் நிபுணரை அங்கீகரிப்பதற்கும், அவர்கள் விரும்பும் விளையாட்டில் மகிழ்ச்சியுடன் ஈடுபட ஒரு இன்டராக்டிவான வழியை இதன் மூலம் நாங்கள் ஏற்படுத்தித் தருகிறோம். எங்களைப் பொறுத்தவரை, அனைவருடனும் இணையவும், மகிழ்ச்சியான மற்றும் விளையாட்டான தருணங்களை எப்படி உருவாக்குவது என்பதே இந்த முன்னெடுப்பின் நோக்கமாகும். இது ஒரு சிறிய ஸ்நாக்ஸ் இடைவேளையை நீண்ட காலம் மனதில் பதிய செய்யும் ஒரு அனுபவமாக மாற்றிவிடும்”, என்று தெரிவித்தார்.
சச்பேங்க் நிறுவனத்தினக் சிசிஓ உம்மா சைனி கூறுகையில், "பரபரப்பான இந்த டி20 சீசனில் எதுவும் நடக்கலாம், போட்டியைப் பார்க்கும்போது, நாம் அனைவரும் நடுவர்களாக மாறுகிறோம்! நிஜத்தில் நாம் இயல்பான மக்களாக வாழ்வது போலவே! நாம் ஒரு சமூகமாக மிகுந்த ஈடுபாட்டுடன் கிரிக்கெட்டில் ஒருங்கிணைகிறோம்; இது எங்கள் அழகிய வாழ்வியலின் ஒரு பகுதியாகும். ‘பிரிட்டானியா 5050 4வது அம்பயர்’ டிஜிட்டல் கேம் மற்றும் அதன் விளம்பரங்களை உயிர்ப்பிக்கும் விதமாக, இந்த கிரிக்கெட் சீசனில் இரண்டாவது ஸ்கிரீனில் ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை தொடங்குவதற்காக - டிஜிட்டல் நுண்ணறிவுடன், மனித நுண்ணறிவையும் நாங்கள் ஒருங்கிணைத்துள்ளோம்; கிரிக்கெட் மீதான நமது அன்பு மற்றும் பிராண்டின் நிலைப்பாடு ஆகியவற்றைக் இந்த விளம்பரத்தில் கொண்டு வந்தோம். அது ஒரு பட்டமாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு கேட்ச்சாக இருந்தாலும் சரி, இந்தியாவில் ஒவ்வொருவரும் அம்பயர் (அம்பயர்) ஆகலாம், என்பதே இதன் சாராம்சம்”, என்று தெரிவித்தார்.
இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முதலில் பிரிட்டானியா 5050 பேக்கை ஸ்கேன் செய்ய வேண்டும். அதன் மூலம் 4வது அம்பையர் விளையாட்டை விளையாடவும் - போட்டிகளின் காட்சிகளை கவனமாக பார்த்து, உங்கள் முடிவுகளை எடுக்கவும். மேட்ச் பாஸ்கள், கேஷ்பேக் மற்றும் பலவற்றை வெல்லும் வாய்ப்பைப் பெறலாம் என்று பிரிட்டானியா செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.