எச்டிஎஃப்சி வங்கி பரிவர்த்தன் தமிழ்நாட்டில் சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலை ஒன்றைத் துவங்கியுள்ளது

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான எச்டிஎஃப்சி வங்கி, அதன் பிரதான கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு திட்டமான #பரிவர்தன் மூலம் தமிழ்நாட்டின் பொன்னமராவதி பகுதியில் - சிறுதானியங்கள் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கும் ஆலை ஒன்றைத் துவங்கியுள்ளது. டான் அறக்கட்டளை மற்றும் ஃபார்மர் புரொடியூசர் ஆர்கனைசேஷன் ஆகியவற்றின் கூட்டணியில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முன்னெடுப்பானது கிட்டத்தட்ட 2,000 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மதிப்புக்கூட்டப்பட்ட முறையில் மேம்படுத்துவதை உறுதி செய்கிறது. 

 பிப்ரவரி 24 அன்று, புதுக்கோட்டை பொன்னமராவதி கிராமத்தில் நடைபெற்ற இதன் திறப்பு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஐஎஸ். மெர்சி ரம்யா தலைமை விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில், புதுக்கோட்டை வேளாண்துறை இணை இயக்குநர் எம்.பெரியசாமி, புதுக்கோட்டை வேளாண் வணிகத் துறை துணை இயக்குநர் எ, சங்கரலட்சுமி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் தீபக் குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள எண்ணெய் பிரிக்கும் ஆலையானது விவசாயிகளுக்கு இந்த ஆலை இரண்டு குறிப்பிடத்தக்க வழிகளில் உதவவுள்ளது - ஒன்று, மேம்படுத்தப்பட்ட மார்கெட்டிங் மூலம் உள்ளூர் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலம் அவர்களது உற்பத்திப்பொருளுக்கு கூடுதல் மதிப்பினை பெற்றுத் தருகிறது; இரண்டாவதாக, விவசாயிகளுக்கு உயர் தரமான, உள்நாட்டில் பதப்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய்களை கிடைக்கச் செய்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கிறது.

 உற்பத்திப்பொருட்களை முன்னோக்கி கொண்டு செல்ல இணைப்புகளை எளிதாக உருவாக்குவது, உள்ளூர் விவசாயிகளுக்கு ஊக்கமளிப்பது, நிலைத்தன்மை வாய்ந்த நியாயமான விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த பதப்படுத்தும் மையம் உதவும். இந்த ஆலையின் மூலம் ரூ.10 கோடி வருவாயும், ரூ.1 கோடி லாபமும் கிட்டும். 2 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டு மார்கெட்டிங் வாயிலாக இலாபத்தை அதிகரிப்பதன் மூலம் இடுபொருட்களின் செலவைக் குறைப்பதே இதன் நோக்கமாகும்.

இந்த முன்னெடுப்பு குறித்து பேசிய எச்டிஎஃப்சி வங்கியின் ஹெட் சிஎஸ்ஆர், நுஸ்ரத் பதான், “ஒவ்வொரு விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டை ஆதரிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தில் பெரிதளவில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதை உறுதி செய்து - நிலைத்தன்மை வாய்ந்த விவசாயத்தை ஊக்குவிக்கும் இந்த முன்முயற்சியை ஆதரிப்பது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த முன்னெடுப்பானது - நிதி ரீதியாக அனைவரையும் உள்ளடக்குதல், மற்றும் சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற எங்கள் உறுதிப்பாட்டுடனும் ஒத்துப்போகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form