ஐ வாலண்ட்டீர் விருது விழாதனிநபர் மற்றும் நிறுவன தன்னார்வத் தொண்டுகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் இந்தியாவின் முதன்மையான ஐ வாலண்ட்டீர் விருதுகளின் 12வது பதிப்பு பிப்ரவரி 24 அன்று மும்பையில் நடைபெற்றது.மும்பையில் அறிவிக்கப்பட்ட வெற்றியாளர்களை தேசிய நடுவர் குழு தேர்ந்தெடுத்தது.

அவுலா ஷோபனா சென்னை வித்யாசாகரில் தன்னார்வ ஆசிரியையாக, மாற்றுத்திறனாளி குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு தொழில் திறன்களை கற்றுத் தந்ததற்காக ‘வாலண்ட்டீர் ஹீரோ’ விருதைப் பெற்றார். லீடர் இன் எம்ப்ளாய் வாலண்டரிங் விருது ஃபர்ஸ்ட் சோர்ஸ் மற்றும் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு ஆகியவற்றால் பகிரப்பட்டது.

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட கூஞ்ச், தன்னார்வ ஈடுபாட்டின் தலைவருக்கான விருதைப் பெற்றது. வி தி வாலண்ட்டீர்ஸ் முன்முயற்சியான விஸ்க்ரைப் என்ற திட்டத்தில் பங்களித்ததற்காக பெங்களூரைச் சேர்ந்த ஜீவிதா காங்கிற்கு யூத் சாம்பியன் விருது வழங்கப்பட்டது.

”ஐ வாலண்ட்டீர் விருதுகளின் 12வது பதிப்பு நல்லெண்ணத்தின் சக்திக்கு ஒரு சான்றாக நிற்கிறது. இது மற்றவர்களுக்கு தொண்டு செய்யும் உணர்வைக் கொண்டாடுகிறது. நேர்மறையான மாற்றத்திற்கு தன்னலமின்றி பங்களிப்பவர்களை நாங்கள் அங்கீகரிக்கும் வேலையில், இரக்கமுடன் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என ஐவாலண்ட்டீரின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஷலப் சஹாய் கூறினார்.

"எனது வாரத்தின் சில மணிநேரங்களை வீணாக்காமல் இருக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு எளிய தன்னார்வப் பணியாகத் தொடங்கியது இன்று எனது வாழ்க்கையின் சிறந்த முடிவுகளில் ஒன்றாக மாறியது" என 2022 மற்றும் 2023 க்கு இடையில் 1500 மணி நேரத்திற்கும் மேலாக தன்னார்வத் தொண்டு செய்த அவுலா தெரிவித்தார்.

"எங்கள் சமூக பொறுப்புணர்வு கொள்கையின்படி, நாங்கள் சமூகங்களில் முதலீடு செய்வது மட்டுமல்லாமல், எங்கள் ஊழியர்களுக்கு, எங்களுடைய செல்வம், அறிவு மற்றும் நேரத்தை ஒரு பெரிய காரணத்திற்காக பகிர்ந்து கொள்ள எங்களிடம் உள்ள பெரிய அறிவுத் தளத்தை செயல்படுத்துகிறோம்” என ஃபர்ஸ்ட்சோர்ஸ் கம்யூனிட்டி அவுட்ரீச்சின் குளோபல் லீடர் சங்கர மகாலிங்கம் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form