ஜாவா யெஸ்டி மோட்டார் சைக்கிள்கள் சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளதுஇந்தியா குளிர்காலத்திற்குள் நுழைகின்ற போது,  ஜாவா யெஸ்டி மோட்டார்சைக்கிள்ஸ் இல் நாங்கள் அனைத்து துடிப்பான பைக்கர்களையும் ஒரு பயணத்தை மேற்கொள்ளவும் மற்றும் அதன் ‘சவாரி செய்து கொண்டே இருங்கள்’ முயற்சியால் ஆதரிக்கப்படும் எங்கள் அழகான தேசத்தைக் கண்டறியவும் அழைக்கின்றோம். இந்த முயற்சியின் கீழ்- டிசம்பர் 31, 2023க்கு முன் ஜாவா 42 அல்லது யெஸ்டி ரோட்ஸ்டர் ஐ வீட்டிற்கு எடுத்துச் செல்லுங்கள், உங்கள் முதல் மாத எரிபொருள் எங்களை சார்ந்தது.

பண்டிகையின் உற்சாகத்தை அதிகரிக்க , இந்த டிசம்பரில் எங்கள் இரு சக்கர சுவாரஸ்யம் தேடுபவர்களுக்கு  சாலைக்கு வருவதற்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் வைத்திருப்பதை உறுதிசெய்யம் வகையில் அதிகபட்சம் செய்து, அவர்களுக்கு பொருத்தமான உபகரணங்களை வழங்கவும் விரும்பினோம். எனவே, எங்களின் மிகவும் விரும்பப்படும் இரண்டு ரோட்ஸ்டர்களான ஜாவா 42 மற்றும் யெஸ்டி ரோட்ஸ்டர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களை முன்பதிவு செய்து டெலிவரி செய்யும் அனைத்து வாடிக்கையாளர்களும் ‘கீப் ரைடிங்’ திட்டத்தின் கீழ் ரூ.30,000 வரை பலன்களைப் பெறலாம்.

ஜாவா மோட்டார்சைக்கிள் வரிசையில் ஜாவா, ஜாவா 42, ஜாவா 42 பாபர் மற்றும் ஜாவா பெராக் ஆகியவை அடங்கும். யெஸ்டி மோட்டார்சைக்கிள் வரிசையில் யெஸ்டி ரோஸ்டர், யெஸ்டி ஸ்க்ராம்ப்ளர் மற்றும் யெஸ்டி அட்வென்ச்சர் ஆகியவை அடங்கும்.  ஜாவா மற்றும் யெஸ்டி மோட்டார்சைக்கிள்கள் அவற்றின் நீடித்த வடிவமைப்பு, ஏக்கம் நிறைந்த கவர்ச்சி மற்றும்,ரைடர்களுக்கு அவர்களின் சாகசங்களுக்கு சரியான துணையை வழங்குகின்ற ஒரு பலதரப்பட்ட பைக்குகள் ஆகியவற்றிற்கு புகழ் பெற்றவை. ஒவ்வொரு மோட்டார்சைக்கிளும் அதிநவீன பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கும் அதேவேளையில் அதன் வளமான பாரம்பரியத்தை பாதுகாப்பதில் பிராண்டின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. இந்த பிரத்யேக வாய்ப்பு, மோட்டார் சைக்கிள் ஆர்வலர்கள் ஜாவாயெஸ்டி மோட்டார்சைக்கிள்களுக்கு இணையான காலமற்ற வசீகரம் மற்றும் செயல்திறனில் தங்களை மூழ்கடிக்க அனுமதிக்கிறது.

முதல் மாத பெட்ரோல் போன்ற சலுகைகளைத் தவிர, இந்த வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ரைடிங் கியர் மற்றும் சுற்றுலா உபகரணங்களுக்கு ஃபிளாட் 50 சதவிகிதம்தள்ளுபடி, 4 ஆண்டுகள் அல்லது 50,000 கிமீ இலவச நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் எக்ஸ்சேஞ்ச் போனஸ் ரூ.10,000 ஆகிய பலன்களைப் பெற தகுதியுடையவர்களாவார்கள். அவர்களின் சொந்தமாக்கும் செயல்முறையை தடங்கல் இல்லாமல் செய்ய, ஐடிஎஃப்சி பேங்க் இன்  ரூ. 1,888 இல் தொடங்குகின்ற சிறப்பு குறைந்த இஎம்ஐ திட்டங்களும் எங்களிடம் உள்ளது என ஜாவா யெஸ்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form