க்ரோமாவின் மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா" ஜனவரி 7 வரை நடைபெறுகிறது

 



க்ரோமா, டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முதல் மற்றும் நம்பகமான ஆம்னி-சேனல் எலக்ட்ரானிக்ஸ் சில்லறை விற்பனை நிறுவனமாகும் . தமிழ்நாட்டில் முதல் முறையாக ஆண்டு இறுதி விற்பனையாக, 22 டிசம்பர் 2023 முதல் 7 ஜனவரி 2024 வரை "ரூபாய் 20,000  வரையிலான எக்ஸ்சேஞ்ச் பலன்கள் மற்றும் 16,000 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் போனஸுடன் மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா" -வை க்ரோமா அறிமுகப்படுத்தியுள்ளது. 

பண்டிகைக்கால கொண்டாட்டங்களின் உற்சாகத்துடன் க்ரோமா பல்வேறு சலுகைகளை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த மிகப்பெரும் எக்ஸ்சேஞ்ச் திருவிழாவில், ஸ்மார்ட்போன்கள், தொலைக்காட்சி, வீட்டு உபயோக பொருட்கள் என பல பொருட்களின் மீது தள்ளுபடி விற்பனையைத் தொடங்கியுள்ளது. மேலும், இது தொடர்பாக க்ரோமா விற்பனை நிலையங்கள் மற்றும் அதன் அதிகாரப்பூர்வமான இணையதளமான,க்ரோமா.காம்-ல் காணலாம்.

"மெகா எக்ஸ்சேஞ்ச் திருவிழா" விற்பனையின் கீழ், வாடிக்கையாளர்கள் தங்களது இல்லங்களில் உபயோகப்படக்கூடிய பழைய மற்றும் உபயோகத்தில் இல்லாத எலக்ட்ரானிக் பொருட்களை கொடுத்து, சிறந்த தள்ளுபடி விலையில் புத்தம் புதிய பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் - நீங்கள் வாங்கும் புத்தம் புதிய எலக்ட்ரானிக்ஸ், எக்ஸ்சேஞ்ச் செய்த பொருட்களுக்கு பொருந்திப்போக வேண்டும் என்ற அவசியமில்லை. 

கூடுதலாக, க்ரோமா தற்போது நீடித்த வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உபயோகத்தில் இல்லாத எலக்ட்ரானிக் பொருட்களைப் பெற்றுக்கொள்கிறது. அந்தப் பொருட்களை சமூகப் பொறுப்புணர்வுடன் மறுசுழற்சி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், வாடிக்கையாளர் அடுத்தமுறை க்ரோமாவில் பொருள் வாங்கும்போது ரூபாய் 500 தள்ளுபடியைப் பெறலாம்.

உங்கள் பழைய எலக்ட்ரானிக் பொருட்களைக் கொடுத்து எக்ஸ்சேஞ்ச் ஆக எந்தவொரு பொருளையும் வாங்கிக்கொள்ளலாம்.  ₹16,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ₹20,000 எக்ஸ்சேஞ்ச் பலன்களுடன் உங்கள் பழைய ஸ்மார்ட்போனை புதுப்பியுங்கள். 

இந்த எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் மடிக்கணினிகள் மட்டும் விதிவிலக்கல்ல, அவற்றிற்கும் ₹30,000 வரையிலான தள்ளுபடியைப் பெறுங்கள். இதுமட்டுமின்றி, கூடுதலாக குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் ஏர் கண்டிஷனர்கள் முறையே ₹6,600 மற்றும் ₹5,300 வரை உங்களைப் புத்துணர்வு பெறச் செய்யும் வகையில் பல சேமிப்பு அம்சங்களைக் கொண்டுள்ளன.

பிரத்தியேகமாக, தொலைக்காட்சி ஆர்வலர்கள், தொலைக்காட்சி-டு-தொலைக்காட்சி எக்ஸ்சேஞ்ச்-யில் ஈடுபட்டு, முன்னெப்போதும் இல்லாத வகையில் போனஸ் பெறுங்கள். நீங்கள் எக்ஸ்சேஞ்ச் செய்த தொலைக்காட்சியின் திரை அளவை விட 100 மடங்கு வரை அதிகமான எக்ஸ்சேஞ்ச் போனஸைப் பெறுங்கள். இந்த தனித்துவமான எக்ஸ்சேஞ்ச் சலுகை வாடிக்கையாளர்களுக்கு கணிசமான சேமிப்பை வழங்குவதோடு மட்டுமில்லாமல், அவர்களின் மொத்த எலக்ட்ரானிக் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பையும் மேம்படுத்த உதவுகிறது. 

க்ரோமா தனது ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் அவர்கள் பணத்திற்கான சிறந்த மதிப்பை வழங்குவதை கொள்கையாகக் கொண்டுள்ளது. மேலும், அவர்கள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் புத்தாண்டில் நுழைவதை உறுதி செய்கிறது.  மேலும் தகவல்களுக்கு, தமிழ்நாட்டில் உள்ள எந்த க்ரோமா விற்பனை நிலையத்தையும் நீங்கள் அணுகலாம் அல்லது ஆன்லைன் ஸ்டோரான www.croma.com <http://www.croma.com> ஐ பார்வையிடலாம் என க்ரோமா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form