இத்தாலிய வாகன நிறுவனமான பியாஜியோ குழுமத்தின் 100 சதவிகித துணை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி சிறிய வணிக வாகன உற்பத்தியாளருமான பியாஜியோ வெஹிகல்ஸ் பிரைவேட் லிமிடெட் அதன் 3-சக்கர இன்டர்னல் கம்பஷன் இன்ஜின்கொண்ட அபே பிராண்டு வாகனங்களின் விலையை அதிகரிக்கவுள்ளது. டீசல், சிஎன்ஜி, எல்பிஜி, மற்றும் பெட்ரோல் வகைகளில் அபே சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்கள் இரண்டிற்கும் இந்த நிலையான விலையுயர்வு பொருந்தும். இந்தியா முழுவதும் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலையில், 6000 ரூபாய் வரை விலை உயர்வு இருக்கும்.
3 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெற்ற, 3-சக்கர வணிக வாகனங்களின் அபே பிராண்ட் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிதும் விரும்பப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு முடிவடைவதால், வாடிக்கையாளர்கள் இந்தியாவில் எங்கிருந்தும் தங்களுக்கு அருகிலுள்ள பியாஜியோ டீலர்ஷிப்பிற்கு விரைந்து சென்று, 31 டிசம்பர் 2023 வரை தங்கள் விருப்பமான அபேக்கு சிறந்த மற்றும் குறைந்த விலையைப் பெறலாம்.
பியாஜியோ வெஹிக்கில்ஸ் பிரைவேட் லிமிடட்டின் இவிபி, சிவி டொமஸ்டிக் பிசினஸ் அண்ட் ரீடெய்ல் ஃபைனான்ஸ் அமித் சாகர், “இந்தப் பண்டிகைக் காலத்தில், சில்லறை விற்பனையில் 38 சதவிகிதம் அதிகரிப்பைப் பதிவு செய்ததால், எங்களது 3-சக்கர வாகனங்களுக்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது. 2023 ஆம் ஆண்டில் தொற்றுநோயிலிருந்து விடுபட்டதும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கான பணவீக்கம் மற்றும் உள்ளீட்டு செலவை உள்வாங்க உணர்வுபூர்வமாக முடிவு செய்து விலைகளை நிலையானதாக வைத்திருக்கிறோம். 1 ஜனவரி 2024 முதல் அபே ஐசிஇ வண்டிகள் விலை உயர்வுக்கு உட்படுத்தப்படுவதால், தற்போதைய விலை 31 டிசம்பர் 2023 வரை செல்லுபடியாகும் என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறோம். மேலும், அபே ஒரு தொழில்முனைவோரின் சிறந்த துணையாகவும் வணிகக்கூட்டாளியாகவும் திகழ்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்” என கூறினார்.