கடந்த நாற்பது ஆண்டுகாலமாக, இந்தியர்களின் இல்லங்களில் டாடா உப்பு, நம்பிக்கை மற்றும் தூய்மையின் அடையாளமாக விளங்கி உயர்தர அயோடின் கலந்த உப்பை வழங்கி வருகிறது. அதிலும் தற்போது நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில், தங்களுடைய மதிப்புமிக்க நுகர்வோரின் நலனை மேம்படுத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. காலத்தினால் அழியாத நம்பிக்கை, தூய்மை மற்றும் தரம் ஆகியவற்றை உறுதிமொழியாய் கொண்ட டாடா உப்பு பிராண்டைத் தேர்ந்தெடுத்து, நுகர்வோர் தங்களின் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்க ஊக்குவிக்கிறது.
டாடா உப்பு ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் என்று இல்லாமல், இந்தியா முழுவதிலும் உயர்தரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட வரையறை அம்சங்களுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; மேலும், இந்தியா முழுவதும் உள்ள 100 உப்புகளில் மிகவும் சுத்திகரிக்கப்பட்டதாக ஆய்வக சோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்தொழில்துறையில் முன்னணியில் இருக்கும் டாடா உப்பு, தேசத்தின் நலனுக்கான அதன் அர்ப்பணிப்பு கொள்கையில் பெருமை கொண்டு செயல்படுகிறது.
டாடா நுகர்வோர் தயாரிப்புகளின் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள்-இந்தியா பிரிவின் தலைவர், தீபிகா பன் கூறுகையில், “இந்த பிராண்டானது இந்தியாவில் அயோடின் சத்துடன் மேம்படுத்தும் அயோடின்மையமாக்கல் இயக்கத்தில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. மேலும், அயோடின் தொடர்பான குறைபாடுகள், குரல்வளைச் சுரப்பி வீக்கம், வளர்ச்சிக் குன்றல் மற்றும் தொடர்புடைய சிக்கல்களை ஒழிக்க அயராது உழைத்து வருகிறது. சமீப காலமாக, உப்பை அயோடைசேஷன் செய்வது பற்றிய விவாதங்கள் இந்தியாவில் நடைபெற்று வருகின்றன. டாடா உப்பு இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குறிப்பாக குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு அயோடினின் முக்கியத்துவத்தை வலியுறுத்த விரும்புகிறது. உப்பில் உள்ள இயற்கையான அயோடின், பெரும்பாலும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் ஆகியவற்றால் உப்பில் இருக்கும் இயற்கை அயோடின், பரிந்துரைக்கப்பட்ட சரியான அளவான 15 முதல் 30பிபிஎம் -ஐ விட குறைவாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. சரியான அயோடின் அளவுடன் முக்கியமான நுண்ணூட்டச்சத்தாக டாடா உப்பு, குழந்தைகளின் மன வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நம்பகமான அயோடினை வழங்குவதன் மூலம், இந்த பிராண்ட் நாட்டின் சுகாதார மேம்பாட்டில் தொடர்ந்து ஆர்வத்துடன் பங்களித்து வருகிறது என்பதை எங்கள் நுகர்வோர் அனைவருக்கும் கூற விரும்புகிறோம்” என்றார்.