கரூர் வைஸ்யாவுடன் கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் இணையும் எச்டிஎஃப்சி லைஃப்

இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஹெச்டிஎஃப்சி லைஃப் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி ஆகியவை கார்ப்பரேட் ஏஜென்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தின் மூலம், கரூர் வைஸ்யா வங்கியின் வாடிக்கையாளர்கள் பாதுகாப்பு, சேமிப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றும் நோய் போன்றவற்றுக்கு நிதி ரீதியான பாதுகாப்பை தரும் எச்டிஎப்சி லைஃப்-ன் பரந்த அளவிலான ஆயுள் காப்பீட்டுத் திட்டங்களைப் பெற முடியும். 

இந்த கூட்டாண்மை, எச்டிஎப்சி லைஃப் மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இரு நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகள் மற்றும் சேவைகளை சிறந்த வகையில் வழங்க உதவும்.

இந்தியாவில் பெரும்பாலானோர் காப்பீடு செய்வதில்லை. இந்த பாதுகாப்பு இடைவெளி மற்ற வளர்ந்த நாடுகளை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது.  இதற்காக எச்டிஎப்சி லைஃப், நாடு முழுவதும் உள்ள தனிநபர்களை காப்பீடு பாதுகாப்பின் கீழ் கொண்டு வர தொடர்ந்து முயற்சித்து வருகிறது. 

இதன் மூலம் அவர்கள் நிதி ரீதியாக பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்படும். இந்தியாவை காப்பீடு செய்வதற்கான எச்டிஎப்சி லைஃப்பின் இந்த முயற்சி, கரூர் வைஸ்யா வங்கியுடனான கூட்டாண்மை மூலம் மேலும் வலுப்படும்.

வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பி.ரமேஷ்பாபு பேசுகையில், ”எச்டிஎப்சி லைஃப் உடனான இந்த கார்ப்பரேட் கூட்டணி எங்கள் வாடிக்கையாளர்களுக்கு காப்பீட்டுத் திட்டங்களை பெறுவதற்கான மேலும் ஒரு விருப்பத்தை வழங்கும். எச்டிஎப்சி லைஃப் ஆன்லைனிலேயே அறிவிப்புகளை வழங்குவதால், எங்கள் வாடிக்கையாளர்கள் இருந்த இடத்தில் இருந்தே இந்த சேவைகளைப் பெற முடியும். எங்களின் இருதரப்பும் இடையே, நம்பிக்கை, நம்பகத்தன்மை மற்றும் வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட ஒத்துப்போகும் மதிப்புகளுடன், ஒரு தடையற்ற அனுபவத்தை உருவாக்க வேண்டுமென்பதே எங்களின் எதிர்பார்ப்பு’’ என்றார்.

கரூர் வைஸ்யா வங்கியின் தலைமை பொது மேலாளர் மற்றும் நுகர்வோர் வங்கித் தலைவர் திரு.டால்பி ஜோஸ் பேசுகையில், ‘‘எச்டிஎப்சி லைஃப் உடனான எங்கள் கூட்டாண்மையை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டணி, பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட பலதரப்பட்ட ஆயுள் காப்பீட்டு தயாரிப்புகளை வழங்க எங்களுக்கு உதவும்’’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form