இந்தியாவின் சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன் பிராண்டான மோட்டோரோலா, பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனைக்கு முன்னதாக, தங்களது ஸ்மார்ட்போன்களை பெருமளவு தள்ளுபடி விலையில் வாங்குவதற்கான கடைசி வாய்ப்பை அறிவித்துள்ளது. நவம்பர் 1 முதல், ஃப்ளிப்கார்ட் பிளஸ் உறுப்பினர்களுக்கு, மோட்டோரோலா எட்ஜ், மோட்டோ ஜி மற்றும் மோட்டோ இ சீரிஸ் போன்ற பெரும்பாலான ஸ்மார்ட்போன்களை நம்பமுடியாத விலையில் அட்டகாசமான பிக் தீபாவளி விற்பனை விலையில் வாங்குவதற்கான எர்லி ஆக்ஸிஸ் கிடைக்கும்.
ஐபி68 மதிப்பீட்டைக் கொண்ட உலகின் மிக மெலிதான 5G ஸ்மார்ட்போன், மோட்டோரோலா எட்ஜ் 40, நம்பமுடியாத ரூ 26,999 என்ற விலையில் கிடைக்கவுள்ளது. இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த 5ஜி ஸ்மார்ட்போனான மோட்டோ ஜி54 5ஜி மோட்டோரோலாவின் 5ஜி போர்ட்ஃபோலியோவை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இது யாரும் கண்டிராத வகையில் 8+128 ஜிபி மற்றும் 12+256 இபி வகைகள் முறையே ரூ 13,999 மற்றும் 15,999 என்ற சிறப்பு விலையில் கிடைக்கவுள்ளன. மோட்டோ இ13 தள்ளுபடி விலையில் ரூ. 7,499க்கு கிடைக்கும்.மோட்டோரோலா எட்ஜ் 40 நியோ 8+18ஜிபி மற்றும் 12+256ஜிபி ஸ்மார்ட்ஃபோன்கள் தொடக்க விலையாக ரூ. 22,999 மற்றும் 24,999க்கு கிடைக்கும் மற்றும் மோட்டோ ஜி84 5G ஆனது ரூ. 18,999 க்கு வாடிக்கையாளர்கள் வாங்கலாம் என மோட்டோ செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.