திருச்சியில் பாரத் நிவேஷ் மாரத்தான் ஓட்டம்

 


அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இந்தியா மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆன் இந்தியா ஆகியவை இணைந்து உலக முதலீட்டாளர் வாரத்தை 2023 அக்டோபர் 9 முதல்15 வரை கொண்டாடியது. இந்த கொண்டாட்டம்,  திருச்சியில்  உள்ள அண்ணா மைதானத்தில் பாரத் நிவேஷ் ரன் மாரத்தானுடன் நிறைவடைந்தது.

பாரத் நிவேஷ் ஓட்டத்தை செபியின் தலைமைப் பொது மேலாளர் ஸ்ரீ ராஜேஷ் குமார் டாங்கேட்டி மற்றும் ஆதித்ய பீரா சன் லைஃப் அசெட் மேனேஜ்மென்ட் கோ. லிமிடெட் தெற்கு கல்வி முதலீட்டாளர், மண்டலத் தலைவர் குருராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த ஓட்டத்தில் மொத்தம் 419 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 356 ஆண்கள் மற்றும் 63 பெண் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி தவிர ஜோத்பூர், இந்தூர் மற்றும் கவுகாத்தி முழுவதும் பாரத் நிவேஷ் மராத்தான் ஏற்பாடு செய்யப்பட்டது.

உலக முதலீட்டாளர் வார விழாவில், ஏஎம்எஃப்ஐ-ன் தலைமை நிர்வாகி என்.எஸ். வெங்கடேஷ் பேசுகையில், “தனிநபர் மற்றும் சமூக செழிப்புக்கு நிதி நல்வாழ்வு ஒரு முக்கிய அங்கம் என்று நாங்கள் நம்புவதால், இன்றைய நாளில் முதலீட்டாளர் விழிப்புணர்வு முக்கியமானது. உலக முதலீட்டாளர் வாரம் மற்றும் பாரத் நிவேஷ் ரன் போன்ற நிகழ்வுகளின் வெற்றி, நிதி கல்வியறிவை வளர்ப்பதற்கும் முதலீட்டாளர்களை மேம்படுத்துவதற்கும் எங்களின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. செபி மற்றும் பிற பங்குதாரர்களுடன் தொடர்ந்து இணைய நாங்கள் எதிர்நோக்குகிறோம், இது பொருளாதார விழிப்புணர்வு மற்றும் நெகிழ்வான இந்தியாவை உருவாக்குவதற்கான எங்கள் கூட்டுப் பணியை மேலும் மேம்படுத்துகிறது” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form