இந்தியாவின் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தனது புதிய பிராண்ட் பொசிஷனிங் தீம், ‘ஹர் வக்த் கே லியே தையார்’- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய தீம் பல்வேறு தீர்வுகள் மூலம் அவர்களின் நுகர்வோருடன் கூட்டு சேர்வதில் அதன் கவனத்தை எடுத்துக் காட்டுகிறது மற்றும் அவர்களுக்கு கவலை இல்லாத வாழ்க்கையை நடத்த உதவுகிறது. புவியியல், பாலினம், வயதுப் பிரிவுகள் போன்றவற்றில் பெரும்பாலான நுகர்வோரின் விருப்பமான தேர்வாக 'ஹர் வக்த் கே லியே தையார்' தனித்து நிற்கிறது. இது குறிப்பாக இளம் மற்றும் நடுத்தர வயதினருடன் ஒத்திசைத்து போகிறது.இது ஹிங்கிலீஷ் மற்றும் பிற 6 மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பிராண்ட் தீம்காக ஓகில்வி இந்தியாவுடன் இணைந்துள்ளது. பிரச்சாரம் அதன் பிராண்ட் அம்பாசிடரான இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீரர் நீரஜ் சோப்ராவை மையமாகக் கொண்டுள்ளது. ஒரு அசாதாரண கதையில், நீரஜ் எதிர்காலத்தை கணிக்கும் பல அவதாரங்களில் காணப்படுகிறார்.
டாடா ஏஐஏ லைஃப் இன்சூரன்ஸ் தீர்வுகள் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி கவலை இல்லாமல் இருப்பதால், அவர்களின் வணிக இழப்பைப் பற்றி பேசி கொள்கிறார்கள். இந்த பிரச்சாரம் நகைச்சுவையான தொனியில் இருக்கும் அதே வேளையில் டாடா ஏஐஏ உடனிருப்பதால் வாடிக்கையாளர்கள் எப்போதும் தங்கள் கனவுகளை நினைவாக்க தயாராக இருக்க வேண்டும் எனும் கருத்தையும் அழகாக வெளிப்படுத்துகிறது.
புதிய பிராண்ட் தீம் குறித்து டாடா ஏஐஏவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி கிரிஷ் கல்ரா பேசுகையில், "'ஹர் வக்த் கே லியே தையார்' என்பது தெளிவான, தாக்கம் மிக்க மற்றும் ஊக்கமளிக்கும் தீம் ஆகும். இது எங்கள் நுகர்வோரை கூட்டாளியாக்கி அவர்களுக்கு கவலை இல்லாத வாழ்க்கையை வழங்குவதற்கான எங்கள் கவனத்தை திறம்பட வெளிப்படுத்துகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நீரஜ் உடனான எங்கள் தொடர்பு இரு கூட்டாளிகளுக்கும் மிகவும் உற்சாகமாகவும் நிறைவாகவும் இருந்தது. வரும் ஆண்டுகளில் இதை மேலும் வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.
ஓகில்வி இந்தியாவின், சிசிஓ, சுகேஷ் நாயக் கூறுகையில், ”இந்த பிரச்சாரமானது, ஒவ்வொருவரும் தங்களின் எதிர்காலம் பற்றி கவலை இல்லாமல் இருப்பதைப் பார்த்து ஜோசியம் ஆச்சரியப்படுகிறார்கள் . நீரஜ் சோப்ராவின் தலைசிறந்த நடிப்பு - 4 வெவ்வேறு அவதாரங்களை இழுத்து, பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும்” என்றார்.