டிடீடிசி எக்ஸ்பிரஸ் லிமிடெட்-ன் புதிய அலுவலகம் திறப்பு

இந்தியாவின் முன்னணி ஒருங்கிணைந்த எக்ஸ்பிரஸ் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான டிடீடிசி எக்ஸ்பிரஸ் லிமிடெட்  சென்னையில் உள்ள வேலப்பன்சாவடியில் உள்ள கீதாஞ்சலி தொழிற்பேட்டையில் தனது சமீபத்திய மண்டல அலுவலகத்தை திறந்துள்ளது. இந்த நிறுவனம், டிடீடிசி இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சுபாஷிஷ் சக்ரவர்த்தி ஏற்பாட்டில் ஒரு முறையான தொடக்க விழாவை கொண்டாடியது. 

புதிதாக தொடங்கப்பட்ட இந்த அலுவலகம் 1,75,000 சதுர அடிக்கு மேல் உள்ளது. இந்த மையமானது தினமும் 350 டன்களுக்கு மேல் சரக்குகளை கையாளுவதற்கும் செயலாக்குவதற்கும் வசதியாக வலுவான உள்கட்டமைப்புடன் உள்ளது. இந்த அலுவலகம், புதுமையான லீனியர் கிராஸ்-பெல்ட் அமைப்பை பயன்படுத்தி, ஒரு மணி நேரத்திற்கு 9000 பார்சல்களை, ஈர்க்கக்கூடிய அதிநவீன வரிசைப்படுத்தும் அமைப்பை கொண்டுள்ளது என டிடீடிசி செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form