எஸ்ஓஎஃப் தேர்வின் சர்வதேச பட்டியலில் இடம்பெற்று புதுச்சேரி மாணவர்கள் சாதனை

 நடப்பாண்டுக்கான எஸ்ஓஎஃப் ஒலிம்பியாட் தேர்வில் புதுச்சேரியைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் சர்வதேச தரவரிசையில் இடம்பெற்றுள்ளனர்.யுனிவர்சல் அகாடமி சீனியர் செகண்டரி பள்ளியின் நான்காம் வகுப்பு பயிலும் முஹம்மது ஃபஹ்மி, சர்வதேச சமூக ஆய்வு ஒலிம்பியாட் தேர்வில் முதலிடம் பெற்று சர்வதேச தங்கப் பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழைப் பெற்றுள்ளார். எல்எஸ்இ குளோபல் அகாடமியில் இரண்டாம் வகுப்பு மாணவியான சர்ஹா பாத்திமா, சர்வதேச கணித ஒலிம்பியாட் முதலிடம்  பெற்று, சர்வதேச தங்கப் பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழைப் பெற்றார்.தி ஸ்டடி லி கோல் இண்டர்நேஷனல் (The Study Le’Cole International) பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் சித்தரத் லக்ஷ்மிஷா, தேசிய சைபர் ஒலிம்பியாட் தேர்வில் முதலிடம் பெற்று, சர்வதேச வெண்கலப் பதக்கத்தையும் தகுதிச் சான்றிதழையும் பெற்றார்.

எஸ்ஓஎஃப் ஒலிம்பியாட் தேர்வில் 70 நாடுகளில் இருந்து சுமார் 60 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இத்தேர்வில் புதுச்சேரியில் இருந்து மட்டும் 55,000 மாணவர்கள் கலந்து கொண்டனர். 2022-2023 கல்வியாண்டிற்கான ஒலிம்பியாட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு விருதுகளை வழங்குவதற்காக, அறிவியல் ஒலிம்பியாட் அறக்கட்டளை டெல்லியில் மே 28, 2023 அன்று விருது வழங்கும் விழாவை நடத்தியது. ஏழு ஒலிம்பியாட் தேர்வுகளில் பங்கேற்ற முதல் மூன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான முதல் மூன்று எஸ்ஓஎஃப் உலக தரவரிசை வெற்றியாளர்கள் விழாவின் போது விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

இதுகுறித்து  ஒலிம்பியாட் அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குனர் மகாபீர் சிங் கூறுகையில், தேசிய சைபர் ஒலிம்பியாட்,  தேசிய அறிவியல் ஒலிம்பியாட், சர்வதேச கணித ஒலிம்பியாட், சர்வதேச ஆங்கில ஒலிம்பியாட்,  சர்வதேச பொது அறிவு ஒலிம்பியாட், சர்வதேச வர்த்தக ஒலிம்பியாட், சர்வதேச சமூக ஆய்வு ஒலிம்பியாட் ஆகிய தேர்வுகள் நடத்தப்படுகின்றன.  70 நாடுகளில் 1400 நகரங்களில் இருந்து 70,000 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்கள் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்படுகின்றது” என்றார்.  

Post a Comment

Previous Post Next Post

Contact Form