தென்னிந்தியாவில் 5 நகரங்களுக்கு இடையே எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து

எலக்ட்ரிக் பஸ் போக்குவரத்து சேவையில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழும் கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் நியூகோ எலக்ட்ரிக் பஸ் நிறுவனம் தென்னிந்தியாவில் சென்னை - பாண்டிச்சேரி, சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - திருப்பதி வழித்தடங்களில் தனது பஸ் சேவைகளை துவக்கி உள்ளது.

கடந்த ஆண்டு துவக்கப்பட்ட நியூகோ, பயணிகளுக்கு தடையற்ற முன்பதிவு அனுபவம், சிறந்த பயணம் அனுபவம் மற்றும் பாதுகாப்பான மற்றும் பசுமையான பயணத்திற்கு உறுதியளிக்கிறது. இதன் எலக்ட்ரிக் பஸ்கள் இந்தியா முழுவதும் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. முதன்மையாக போபால்-இந்தூர், டெல்லி-சண்டிகர், டெல்லி-ஆக்ரா, டெல்லி-டேஹ்ராடூன், ஆக்ரா-ஜெய்ப்பூர் மற்றும் டெல்லி-ஜெய்ப்பூர் வழித்தடங்களில் இந்நிறுவனம் சிறப்பான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில அதன் தொடர்ச்சியாக தற்போது தென்னிந்தியாவில் தனது சேவைகளை விரிவாக்கம் செய்துள்ளது.

கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவில் பல்வேறு நகரங்களுக்கு இடையே நியூகோ என்ற பிராண்ட் பெயரில் எலக்ட்ரிக் பஸ் சேவையை வழங்கி வருகிறது. இதன் பஸ்களில் பயணம் செய்யும் அனைத்து பயணிகளுக்கும் தண்ணீர் பாட்டில் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட டிஸ்யூ பேப்பர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் இந்த பஸ்கள் பயணிகளுக்கு சத்தமில்லாத சிறந்த பயண அனுபவத்தை வழங்குகின்றன. புதுமையான நவீன தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட நியூகோ பஸ்கள் பயணிகளுக்கு பயணம் துவக்கத்தில் இருந்து முடியும் வரை சொகுசான அனுபவத்தை வழங்குகின்றன. இந்த நிலையில் இந்நிறுவனம் தென்னிந்தியாவில் தனது சேவைகளை துவக்கி உள்ளது. முதல் கட்டமாக சென்னை - திருப்பதி இடையே 12 முறையும், சென்னை - பாண்டிச்சேரி இடையே 12 முறையும், சென்னை - பெங்களூர் இடையே 30க்கு மேற்பட்ட முறையும் தனது சேவைகளை வழங்க உள்ளது.

இதன் பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையம், பாண்டிச்சேரியில் பிஆர்டிசி பஸ் நிலையம், திருப்பதியில் ஆர்டிசி பஸ் நிலையம், பெங்களூரில் மெஜஸ்டிக் நிலையங்களில் இருந்து புறப்படுகின்றன. துவக்க விழா சலுகையாக சென்னை - திருப்பதி மற்றும் சென்னை - பாண்டிச்சேரிக்கு 319 ரூபாய் கட்டணத்தை இந்நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

புதிய பஸ் சேவை துவக்கம் குறித்து கிரீன்செல் மொபிலிட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தேவேந்திர சாவ்லா கூறுகையில், சென்னை-பாண்டிச்சேரி, சென்னை-திருப்பதி மற்றும் சென்னை-பெங்களூரு ஆகிய இடங்களில் எங்கள் செயல்பாடுகள் தொடங்கப்பட்டதன் மூலம் தென்னிந்தியாவில் நியூகோவின் சேவைகளின் விரிவாக்கத்தை அறிவிப்பதில் நாங்கள் மகிவும் மகிழ்ச்சியடைகிறோம். வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் தென்னிந்தியாவில் எங்கள் செயல்பாட்டை நாங்கள் துவக்கி இருப்பது மேலும் எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதோடு பயணிகளுக்கான சிறந்த வசதியையும் அனுபவத்தையும் ஒருங்கிணைந்த வழங்குவதால் அவர்களுக்கான சொகுசான பயணத்திற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம். எங்கள் சேவைகள் மூலம், பாதுகாப்பு, வசதி மற்றும் சரியான நேரத்தை கடைபிடித்தல்  ஆகியவற்றுடன் பயணிகளுக்கான பயண அனுபவத்திற்கு ஒரு முன்னுதாரணமான மாற்றத்தை நாங்கள் கொண்டு வரும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலுக்கு உகந்த சேவையை வழங்குவதற்கும் நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம என்று தெரிவித்தார்.

பயணிகள் தங்களுக்கான பயண டிக்கெட்டுகளை நியூகோவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://nuego.in/ மற்றும் பிற டிஜிட்டல் தளங்களான நியூகோ ஆப், ரெட்பஸ், பேடிஎம் மற்றும் அபிபஸ் மூலம் பதிவு செய்யலாம். Paytm Wallet, Paytm UPI, நெட்-பேங்கிங் மற்றும் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலம் இதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form