ப்ரொஃபிகார்ன் 2023 நிகழ்ச்சியில் க்யூஎல் ஒன் செயலி அறிமுகம்



ஆசியாவின் மிகப்பெரிய வணிக பயிற்சி நிறுவனமான க்யூஎல் ஒன் மே 23 மற்றும் 24-ஆம் தேதிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தரதொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களைக் கொண்டாடும் பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்தியது.ப்ரொஃபிகார்ன் 2023 நிகழ்ச்சிக்காக ஆசியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் பெங்களூருவில் குழுமிய 650க்கும் மேற்பட்டோர், பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய இந்த 2 நாள்  நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் 6 பிரபல பேச்சாளர்கள், மற்றும் தொழில்துறை தலைவர்கள் கலந்து கொண்டு, ஆர்வமிக்க தொழில் நிறுவன உரிமையாளர்களின் கூட்டத்தில் உரையாற்றினர்.  

தொழில் வெற்றிக்கான விருதுகள் வழங்கப்பட்டன. இதில் ஆச்சரியமூட்டும் வளர்ச்சிக் கதைகளைக் கொண்ட மற்றும் வெற்றிகண்ட 30 தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு, பாராட்டப்பட்டன. தொழில் வளர்ச்சிக்காக க்யூஎல் ஒன் நிறுவனத்துடன் ஈடுபாட்டினை ஏற்படுத்திக் கொண்ட பிறகு, வியக்கும் வகையில் பலன்களை அடைந்த தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

ப்ரொஃபிகார்ன் நிகழ்வில், க்யூஎல் ஒன் நிறுவனத்தின் நிறுவனர், ராஜீவ் தல்ரேஜா, மற்றும் இணை நிறுவனர் கரண் ஹசிஜா ஆகியோர் - எம்எஸ்எம்இ நிறுவனங்களின் உரிமையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட, அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு உதவும் க்யூஎல் ஒன் செயலியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தனர்.அந்த செயலியுடன் சேர்த்து, பிசினஸ் சக்சஸ் மேகசின்  என்கிற தொழில் வெற்றிக்கான இதழின் முதல் அட்டைப்படமும் ப்ரொஃபிகார்ன் நிகழ்வில் வெளியிடப்பட்டது. 

நமது வர்த்தக சூழலில், தொழில்துறையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மைக்ரோ, சிறிய மற்றும் நடுத்தர தொழில் உரிமையாளர்கள் அவர்களது ஊக்கமளிக்கும் கதைகளைப் பகிர்ந்து கொள்வதற்காக இந்த இதழ் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த அளவிற்கு கொண்டாடப்படாத எம்எஸ்எம்இ தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு, இந்த நிகழ்வு மிகவும் அவசியமானதாக இருந்தது.

இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வர்த்தகத் தரகு நிறுவனமான ஜீரோதா-வின் நிறுவனர், பில்லியனர் நிதின் காமத்; ஈஸ்மைடிரிப் நிறுவனத்தின் நிறுவனர் பிரசாந்த் பிட்டி, சன்ரைஸ் கேண்டில்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் பாவேஷ் பாட்டியா, டிஜிட்டல் வர்த்தகத்திற்காக இந்தியாவின் மிகப்பெரிய மைக்ரோ விநியோகஸ்தர் நெட்வொர்க்கை உருவாக்கிவரும் ஜூஸ்ல் நிறுவனத்தின் நிறுவனர் ராஜேஷ் டெம்ப்லா, இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் ஐஸ்கிரீம் பிராண்டுகளில் ஒன்றான நேச்சுரல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தின் நிறுவனர்களான ரகுநந்தன் மற்றும் சித்தாந்த் காமத் உள்ளிட்ட பேச்சாளர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். 

இந்த நிகழ்வில் ஊக்கமளிக்கக்கூடிய 9 எம்எஸ்எம்இ நிறுவனங்கள், க்யூஎல் ஒன்  நிறுவனத்துடன் நேரடியான பயிற்சியில் ஈடுபட்டன. இந்த எம் எஸ் எம் இ நிறுவன உரிமையாளர்கள் ஊக்கம் தருபவர்களாக இருந்தனர்.

நிகழ்ச்சி குறித்துப் பேசிய க்யூஎல் ஒன்-ன் நிறுவனர் ராஜீவ் தல்ரேஜா “எங்களது இந்த இதழ் மற்றும்க்யூஎல் ஒன் ஆகியவற்றின் இறுதி நோக்கம் எம்எஸ்எம்இ தொழில் நிறுவன உரிமையாளர்களைக் கொண்டாடுவதேயாகும். ஆகையால் பிஸ்னஸ் சக்சஸ் இதழின் ஒவ்வொரு பதிப்பிலும் புகழ்பெற்ற எம்எஸ்எம்இ தொழில் நிறுவன உரிமையாளர்கள் அட்டைப் படத்தில் இடம்பெறுவார்கள்” என்றார்.

ராஜீவ் தல்ரேஜாவுடன் உரையாடலின் போது பேசிய நித்தின் காமத் “தொழில் நிறுவன உரிமையாளர்களாக உங்கள் செயல்பாட்டை தொடர்ந்து மேம்படுத்துவதும், ஆர்வம் என்கிற காரணியை ஒருபோதும் கைவிடாமல் இருப்பதும் தற்போதையத் தேவையாகும்” என்று கூறினார்.

பிரசாந்த் பிட்டி குறிப்பிடுகையில், “மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில் தொழில்முனைவோராக வேண்டும் என்ற விருப்பம் மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வரும் ஆண்டுகளில் நாட்டில் எம்எஸ்எம்இ நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form