ஓப்போ எஃப்23 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்உலகளாவிய ஸ்மார்ட் சாதனங்களின் முன்னணி பிராண்டான ஓப்போ, அதன் சமீபத்திய ஸ்மார்ட்போனான ஓப்போ எஃப்23 5ஜி- ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சாதனம் 24,999 ரூபாய்க்கு ஓப்போ ஸ்டோர், அமேசான் மற்றும் மெயின்லைன் சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைக்கிறது.

போல்ட் கோல்ட் மற்றும் கூல் பிளாக் என இரண்டு வண்ணங்களில் 8ஜிபி ரேம் + 256ஜிபி ரோம் மாடலில் ஓபோ ஸ்டோர், அமேசான் மற்றும் மெயின்லைன் ரீடெய்ல் அவுட்லெட்டுகளில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ கார்டுகள், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் பிற முன்னணி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் மே 18 முதல் மே 31 வரை 6 மாதங்கள் வரை 10 சதவிகித கேஷ்பேக் மற்றும் நோ காஸ்ட் இஎம்ஐயை அனுபவிக்க முடியும். 

இஎம்ஐ ஃபைனான்ஸ் திட்டங்களில் பஜாஜ் ஃபைனான்ஸ், டிவிஎஸ் கிரெடிட் மற்றும் எச்டிபி பைனான்சியல்ஸ் ஆகியவற்றிலிருந்தும் சலுகையைப் பெறலாம். லாயல் ஓபோ வாடிக்கையாளர்கள் 2500 ரூபாய் வரை எக்ஸ்சேஞ்ச் மற்றும் லாயல்டி போனஸைப் பெறலாம். ஓபோ தவிர மற்ற ஸ்மார்ட்போன்களை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் ரூ. 1500 வரையிலான எக்ஸ்சேஞ்ச் சலுகையையும் பெறலாம்.    நோமோபோபியா சிக்கலை எதிர்த்துப் போராடவும்  நீண்ட கால, அதிக திறன் கொண்ட, நீடித்திருக்கக்கூடிய  பேட்டரி கொண்ட சாதனத்திற்கான இந்த ஒரு இணைத் தேவையை பூர்த்தி செய்ய -  ஓப்போ எஃப்23 5ஜி-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

கைப்பேசியானது ஒப்போவின் தனியுரிம 67வாட் சூப்பர்விஒஒசிடிஎம் ஃபிளாஷ் சார்ஜிங்கைக் கொண்டுள்ளது, இது சாதனத்தை 18 நிமிடங்களில் 50 சதவிகிதமாக மாற்றுகிறது, அதே நேரத்தில் 5 நிமிட சார்ஜிங்கினால்   6 மணிநேர தொலைபேசி அழைப்புகள் அல்லது 2.5 மணிநேர யூடியூப் வீடியோவைப் பார்க்க முடியும். மேலும், ஓபோவின் பேட்டரி ஹெல்த் எஞ்சினால்  கைபேசியை 1600 முறை சார்ஜ் - டிஸ்சார்ஜ் செய்ய முடியும் என்பதை  உறுதி செய்கிறது. அதாவது  எஃப்23 5ஜி  பாட்டரியானது நான்கு ஆண்டுகள் வரை உகந்த திறனுடன் செயல்படும். ஓபோ, நாள் முழுவதும் ஏஐ பவர்-சேவிங் மோட், சூப்பர் நைட்-டைம் ஸ்டேன்ட்பை  மற்றும் 5-லேயர் சார்ஜிங் புரொடக்ஷன் போன்ற அம்சங்களுடன் பேட்டரியின் நம்பகத்தன்மை மற்றும் பாதுகாப்பிலும் கவனம் செலுத்துகிறது, இது அடாப்டர் ஓவர்லோட் பாதுகாப்பு, ஃபிளாஷ் சார்ஜ் நிலை அடையாள பாதுகாப்பு, சார்ஜிங் போர்ட் ஓவர்லோட் பாதுகாப்பு, பேட்டரி மின்னோட்டம்/மின்னழுத்த சுமை பாதுகாப்பு மற்றும் பேட்டரி ஃயூஸ்  பாதுகாப்பு ஆகியவற்றுடன் வருகிறது .

எஃப்23 5ஜி ஃபோனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி எஸ்ஒசி, 256ஜிபி சேமிப்பகம், எஸ்டி கார்டு வழியாக 1டிபி வரை விரிவாக்கக்கூடிய நினைவகம், 8ஜிபி ரேமை ஓப்போவின் ரேம் விரிவாக்க தொழில்நுட்பம் மூலம் சேமிப்பகத்தை மேலும் 8ஜிபி வரை நீட்டித்தல், கலர் ஓஎஸ்13.1, ஸ்கிரீன் டிரான்ஸ்லேட்,  மெசேஜிங் பயன்பாடுகளில் தானாக பிக்சலேட் பயனர் புகைப்படங்கள் மற்றும் உங்கள் முக்கியமான ஆவணங்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் பாதுகாப்பதற்கான தனிப்பட்ட பாதுகாப்பு 4எம்பி ஏஐ ஷூட்டர், 2எம்பி டெப்த் கேமரா, 2எம்பி மைக்ரோலென்ஸ் மற்றும் 32எம்பி செல்ஃபி ஸ்னாப்பர் - போர்ட்ரெய்ட் மோட், ஏஐ போர்ட்ரெய்ட் ரீடச்சிங், பின்பக்கத்தில் பிரீமியம் தோற்றத்திற்கு நுண்ணிய நேர்த்தியான வைரங்களை ஒத்த மில்லியன் கணக்கான நானோ-நிலை புடைப்புக்கள், 6.72-இன்ச் பெரிய டிஸ்ப்ளே, 120எச்இசட் அல்ட்ரா-ஹை ரெஃப்ரெஷ் ரேட், 3டி வளைந்த திரையை 91.4 சதவிகித ஸ்பிரீன்-டூ- பாடி- ரேஷோ ஆகிய அம்சங்களைக் கொண்டுள்ளது.

ஓபோ வின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தமியன்த் கானோரியா, "  ஓபோ  எஃப்23 5ஜி உடன், பேட்டரி ஹெல்த் எஞ்சின் மற்றும் சூப்பர்விஒஒசிடிஎம் ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற புதுமையான தொழில்நுட்பங்களை வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். இது தடையற்ற தொடர் பயன்பாட்டு  அனுபவத்திற்கு நம்பகமான மற்றும் வசதியான பேட்டரி செயல்திறனை வழங்குகிறது. எனவே, உங்கள் மொபைலின் பேட்டரி ஆயுளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் விரும்பும் விஷயங்களை அனுபவிப்பதில் கவனம் செலுத்தலாம்" எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form