இந்தியாவின் முன்னணி ஓரல் கேர் பிராண்டான கோல்கேட், அதன் முதன்மைத் தயாரிப்பான கோல்கேட் ஸ்ட்ராங் டீத் டூத்பேஸ்டை புதுப்பித்த ஃபார்முலாவுடன் மறுஅறிமுகம் செய்வதாக அறிவித்தது. கோல்கேட்டின் தனித்துவமான அர்ஜினைன் தொழில்நுட்பத்தால் செறிவூட்டப்பட்ட இந்த பற்பசை கால்சியத்தின் அளவை மேம்படுத்தி பற்களுக்கு ஊட்டமளித்து அவற்றை 2 மடங்கு வலிமையாக்குகிறது. கோல்கேட் ஸ்ட்ராங் டீத் டூத்பேஸ்ட் அதன் சமீபத்திய- "பேஸ்ட் ஹீ நஹின், டான்டோன் கா போஷன் ஹை யே“ பேஸ்ட் மட்டுமல்ல பற்களின் பாதுகாவலன் இது“!"என்ற விளம்பரமானது பற்களின் ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை முன்வைக்கிறது.
சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உட்கொள்வது பற்சிப்பி பலவீனமடைவதற்கும், பற்களில் கால்சியம் இழப்பு ஏற்படுவதற்கும் வழிவகுக்கிறது. இந்த செயல்முறையை எதிர்கொள்ள, நமது வாயில் உள்ள உமிழ்நீர் இயற்கையான கால்சியத்தை பற்களின் மீது டீ மீனறலைசேஷன் செய்கிறது. இது நமது பற்கள் ஊட்டமடைவதற்கு மிக முக்கியமானதாகும்.கோல்கேட் ஸ்ட்ராங் டீத் டூத் பேஸ்டில் அர்ஜினைன் எனப்படும் தனித்துவமான, இயற்கையாக உற்பத்தியாகும் அமினோ அமிலம் உள்ளது. இது ஃப்ளோரைடு இயற்கையான கால்சியத்தை மீண்டும் பற்களில் படியச்செய்யும் செயல்முறையை மேம்படுத்துகிறது. பற்பசை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைனில் கிடைக்கும்.
நிகழ்ச்சியில் பேசிய கோல்கேட்-பாமோலிவ் இந்தியாவின் சந்தைப்படுத்தல் இயக்குனர் குன்ஜித் ஜெயின், "கோல்கேட் ஸ்ட்ராங் டீத் டூத்பேஸ்ட் அதன் தனித்துவமான அர்ஜினைன் அடிப்படையிலான தொழில்நுட்பத்துடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இது உங்கள் பற்களை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், விஞ்ஞான அடிப்படையில் அவற்றிற்கு ஊட்டமளிக்கிறது. இந்த மேம்பட்ட ஃபார்முலா முன்பை விட சிறந்த விளைவுகளை வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்றார்.