கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸின் காப்பீட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் அதன் சமூக சேவை மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை அதிகரிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஜூன் 2 முதல் 6-ந்தேதி வரை புதுச்சேரியில் உள்ள திருக்கனூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் சுகாதார முகாமை நடத்துகிறது. இந்த முகாமை புதுச்சேரி மாவட்ட கலெக்டர் வல்லவன் துவக்கி வைத்தார். சுகாதார சேவைகளை மக்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்வதன் மூலம், காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இந்நிறுவனம் முக்கிய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. நோய்கள் வராமல் தடுப்பது, உடல்நலப் பிரச்சினைகளைக் கண்டறிதல், சிகிச்சை மற்றும் தொடர் கவனிப்பு ஆகியவற்றை மக்களுக்கு வழங்குவதற்கு இம்முகாம் உதவியாக இருக்கிறது.

வோக்கார்ட் அறக்கட்டளையுடன் கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் விருதுநகர், தூத்துக்குடி மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கடந்த மே மாதம் 22-ந்தேதி முதல் ஜூன் 1-ந்தேதி வரை மருத்துவ முகாம்களை நடத்தியது. இந்த மருத்துவ முகாம்கள் மூலம் இலவச மருத்துவ பரிசோதனை, மருத்து ஆலோசனை மற்றும் நோயாளிகளுக்கு மருந்துகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. இந்த முகாம்கள் மூலம் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் பயன் அடைந்துள்ளனர். அனைவருக்கும் காப்பீடு என்பதன் அடிப்படையில், இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மாநிலங்களுக்கான முன்னணி காப்பீட்டு நிறுவனமாக கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தை பரிந்துரைத்துள்ளது.

இது குறித்து கோட்டக் மஹிந்திரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேஷ் பாலசுப்பிரமணியன் கூறுகையில், நாங்கள் நடத்தும் இந்த மருத்துவ முகாம்களின் மூலம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கிராமப்புறங்கள், நகர்ப்புற குடிசைப் பகுதிகள் மற்றும் பிற பகுதிகளில் உள்ள மக்களிடையே உடல்நலம் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் காப்பீட்டு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எங்களின் முக்கிய நோக்கமாகும். ஒவ்வொருவரும் அவர்களின் வருமானம் அல்லது பின்னணியைப் பொருட்படுத்தாமல், காப்பீடு மூலம் தரமான மருத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பை பெற வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை கருத்தில் கொண்டு, அனைவரும் அணுகக்கூடிய குறைந்த கட்டணத்தில் சுகாதார மற்றும் காப்பீட்டு சேவைகளை புதுச்சேரி மக்களுக்கு வழங்க நாங்கள் தயாராக உள்ளோம் என்று தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form