கோக் ஸ்டுடியோ தமிழின் ‘கண்மூடுதோ’ பாடல் வெளியீடுமுதல் பாடலான சகவாசி 2 மாதங்களுக்குள் 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வெற்றி பெற்ற நிலையில், வேண்டும் மற்றும் தமிழி ஆகிய பாடல்களை தொடர்ந்து, கோக் ஸ்டுடியோ தமிழ் தனது நான்காவது பாடலான சீசன் 1-ல் இருந்து ‘கண்மூடுதோ’ பாடலை வெளியிட்டது. 

இந்தப் பாடலில் பிரபலமான மற்றும் புகழ்பெற்ற பின்னணி பாடகி சின்மயி ஸ்ரீபதா மற்றும் கதாசிரியர் ஜான் பிரதீப் ஜேஎல் தாலாட்டு மற்றும் மெல்லிசையை தனித்துவமான வடிவத்தில் கொடுத்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்துள்ள மெல்லிசை பாடல் புவியியல் எல்லைகள், மொழிகள் மற்றும் பாலினங்களை விஞ்சும் மற்றும் அவர்களின் மிகவும் தூய்மையான மற்றும் மகிழ்ச்சியான நினைவுகளை நினைவூட்டும். 

சின்மயி, ஒரு புதிய தாயாக இருப்பதால், ஒரு பெற்றோருக்கும், நடக்க தொடங்கி இருக்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை தனது மெல்லிசை குரல் மூலம் தடையின்றி பிரதிபலிக்கிறார். ஜான் பிரதீப் ஜேஎல், தனது கதைசொல்லல் மூலம் குழந்தைகளுடனான சிறந்த பிணைப்பிற்கு பெயர் பெற்றவர், இந்த இசையமைப்பில் பாடல் வரிகள் சிரமமின்றி பூர்த்தி செய்து சரியாக பொருந்துகிறது.

கோக் ஸ்டுடியோ தமிழ் சீசன் ஒன், தமிழ்நாட்டின் கலாசார தத்துவத்துடன் இணைந்த உணர்வுகளை தூண்டும் கதைகளை சொல்ல ஒரே மேடையில் ஒன்று கூடும் வளர்ந்து வரும் கலைஞர்களை கொண்டாடுகிறது. ஹிப்-ஹாப் ஸ்டால்வார்ட் அறிவு மற்றும் புகழ்பெற்ற இசை தயாரிப்பாளரான சீன் ரோல்டன் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த மேடை, மாநிலம் முழுவதிலும் இருந்து 25க்கும் மேற்பட்ட புகழ்பெற்ற மற்றும் திறமையான கலைஞர்களை ஒன்றிணைத்து எட்டு மறக்கமுடியாத பாடல்களை உருவாக்குகிறது. கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் அடையாளமான இசைக்கருவிகளின் அனுபவமிக்க ஒலிகளால் இந்த பாடல்கள் வலுப்பெறுகின்றன.

பழங்கால இசைக்கருவிகளின் மறுமலர்ச்சிக்கு பின்னால் உள்ள ஒரு சக்தியாக பிரபலமாக அறியப்படும் யாழ் தருண்சேகர் இந்த பாடலின் சிறப்பம்சமாகும். யாழ் என்பது பழங்கால தமிழ் இசையில் பயன்படுத்தப்பட்ட வீணை போன்ற ஒரு கருவியாகும். மேலும் இது 2,000 ஆண்டுகளுக்கு முந்தையது.

கோகோ கோலா நிறுவனத்தின் இந்தியா மற்றும் தென்மேற்கு ஆசியாவின் மார்க்கெட்டிங் துணை தலைவர் அர்னாப் ராய் கூறுகையில், “கடந்த தசாப்தத்தில், கோக் ஸ்டுடியோ பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தென்னாப்பிரிக்கா, எகிப்து, வங்காளதேசம் மற்றும் பல நாடுகளில் செயலில் இருப்பதன் மூலம் உலகளவில் மிகவும் வெற்றிகரமான இசை பண்புகளில் ஒன்றாக உள்ளது. கோக் ஸ்டுடியோ தமிழ் துவக்கமானது, உலகின் பழமையான வாழும் மொழிகளில் ஒன்றான மற்றும் அதன் வரலாறு மற்றும் செழுமையுடன் உலக அளவில் ஒப்பிட முடியாத ஒரு கலாசாரத்திற்கான மரியாதையாகும். உலகெங்கிலும் உள்ள 80 மில்லியன் தமிழ் பேசும் மக்களுடன் தமிழ் இசையின் புகழ்பெற்ற பன்முகத்தன்மையை கொண்டாட கோக் ஸ்டுடியோ தமிழ் தளம் எங்களுக்கு உதவும். மேலும் தமிழ் இசையின் ட்யூன்களை பெரிய அளவில் சர்வதேச பார்வையாளர்களுக்கு தொடர்ந்து பரப்புகிறது" என்றார்

சின்மயி ஸ்ரீபதா கூறுகையில் “சில மாதங்களுக்கு முன்பு, என் குழந்தைக்காக நான் உருவாக்கிய டியூனை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டேன். இது ஒரு தாலாட்டு. என் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் ஒரு தாலாட்டு பாடுவதை இயல்பாக உணர்ந்தேன். அப்போதுதான் கோக் ஸ்டுடியோ குழு தாலாட்டு காட்சியை உருவாக்க என்னை அணுகியது. இந்த காட்சிக்காக, ஜான் மற்றும் மற்ற குழுவினருடன் ஒத்துழைத்தது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது.

ஜான் பிரதீப் ஜேஎல் மேலும் கூறுகையில், “இந்த காலத்தில் குழந்தைகள் தாலாட்டு மற்றும் கதைகளை கேட்டு தூங்குவதை பார்ப்பது அரிது. ஆனாலும், இந்த பாடல் தூங்கும் நேர கதைகளின் மயக்கத்தையும், நல்ல இரவு தூக்கத்தில் வரும் அமைதியையும் மீண்டும் கொண்டுவருகிறது. தற்போது குடும்பங்கள் மிகவும் சிதறி கிடப்பதால், தாத்தா, பாட்டி பெரும்பாலும் தொலைவில் இருக்கிறார்கள். குழந்தை வளர்ப்பு பொறுப்பை பெற்றோரிடம் விட்டுவிடுகிறார்கள். இந்த பாடல் அந்த சாராம்சத்தை அழகாக பதிவு செய்கிறது.

ஸ்போர்ட்டிஃபை, கானா, சாவ்ன், விங்க் மியூசிக் உள்ளிட்ட அனைத்து ஆடியோ ஓடிடி இயங்குதளங்களிலும், கோக் ஸ்டுடியோ தமிழ் ட்யூன் செய்து கேட்கலாம். மேலும் இதை உலகம் முழுவதும் கேட்க முடியும். யுஎம்ஐ இதை விநியோகம் செய்து நிர்வகிக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form