திருத்தங்கல் ஹட்சனில் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டிதமிழ்நாடு மாநில சப் ஜூனியர் (யு-13, யு-15) தரவரிசை பேட்மிண்டன் போட்டி 2023 விருதுநகர் மாவட்ட ஷட்டில் அசோசியேஷன் சார்பில் தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கத்தின் ஏற்பாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி திருத்தங்கல் ஹட்சன் பேட்மிண்டன் சென்டரில்  நடைபெற்றது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதிலும் இருந்து 1064 பேர் பங்குபெற்றனர் . இந்தப் போட்டிக்கு அருண் ஐஸ்கிரீம்ஸ்  நிறுவனம் நிதியுதவி செய்தது. தமிழகத்தில் இருந்து மொத்தம் 679 வீரர்கள் கலந்து கொண்டனர். மே 29 ஆம் தேதி தொடங்கி ஜூன் 4 ஆம் தேதி வரை தமிழ்நாடு திருத்தங்கலில் உள்ள ஹாட்சன் பேட்மிண்டன் மையத்தில் போட்டி நடைபெற்றது. சிவகாசி எம்எல்ஏ திரு ஏ எம் எஸ் ஜி அசோகன் முன்னிலையில் போட்டி நிறைவு பெற்றது.

வளரும் பேட்மிண்டன் வீரர்களுக்கு யு-13 ஆண்கள் ஒற்றையர், யு-13 பெண்கள் ஒற்றையர், யு-15 ஆண்கள் ஒற்றையர், யு-15 பெண்கள் ஒற்றையர், யு-13 ஆண்கள் இரட்டையர், யு-13 பெண்கள் இரட்டையர், யு-15 ஆண்கள் இரட்டையர், யு-15 பெண்கள் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் போட்டி ஏழு நாட்கள் நடத்தப்பட்டன. யு 13 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் எஸ்.எல்.தக்‌ஷன் (சென்னை), யு 13 பெண்கள் ஒற்றையர் பிரிவில் தன்யா எஸ்.ஜே (கோவை), யு 13 ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரித்விக் வி (திருப்பூர்), நிதின் ப்ரகாஷ் ராமசாமி (கோவை), யு 13 பெண்கள் இரட்டையர் பிரிவில் நயோனிகா.ஏ (மதுரை), யாழினி எஸ்.கே (மதுரை), யு 15 ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரோஹித் (கோவை), யு 15 பெண்கள் ஒற்றையர் பிரிவில்  மோக்‌ஷிதா அசோக் குமார் (நாமக்கல்), யு 15 ஆண்கள் இரட்டையர் பிரிவில் முகமது நஃபீஸ் ஆர்.எஸ் (சென்னை), தரன் ராஜ் ஆர் (சென்னை), யு 15 பெண்கள் இரட்டையர் பிரிவில் க்ரித்யா.எஸ் (கோவை), அஞ்சனா எம்(மதுரை) மற்றும் யு 15 மிக்சட் இரட்டையர் பிரிவில் முகமது நஃபீஸ் ஆர்.எஸ் (சென்னை) மற்றும் அஞ்சனா.எம் (மதுரை) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டி மாபெரும் வெற்றியடைந்ததில் தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்ட ஹாட்சன் பேட்மிண்டன் மையத்தின் தலைமை ஆலோசகர் அஜித் ஹரிதாஸ், “தமிழ்நாடு முழுவதும் பல விளையாட்டு நட்சத்திரங்களைப் பார்ப்பது மிகுந்த திருப்தி அளிக்கிறது. வெற்றியாளர்கள் ஒவ்வொருவரும் சிறந்த நுட்பங்களையும் விளையாட்டுத் திறனையும் வெளிப்படுத்தினர். அவர்களின் விளையாட்டு வேகம் எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள் மற்றும் அவர்கள் வரும் நாட்களில் தங்கள் விளையாட்டை மேம்படுத்துவார்கள் என எதிர்பார்க்கிறேன்” என்றார்.

ஹாட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் ஆர் ஜி சந்திரமோகன் வெற்றி பெற்றவர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரையும் வாழ்த்தினார். "இதுபோன்ற போட்டிகளில் பங்கேற்க தங்கள் குழந்தைகளை ஊக்குவிக்கும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு சிறப்பு பாராட்டுக்கள். வரும் நாட்களில் மக்கள் பேட்மிண்டனில் கலந்து கொண்டு இந்தியாவுக்காக பதக்கங்களை வெல்ல வேண்டும் என விரும்புகிறேன். சிறந்த அகாடமியான ஹாட்சன் பேட்மிண்டன் அகாடமி, விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form