புற்றுநோய்க்கான சிகிச்சையை வழங்க ரூ.1200 கோடி நிதி வழங்கிய ஐசிஐசிஐ

நாடு முழுவதும் புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையங்களை நடத்தும் ஒரு புகழ்பெற்ற   நிறுவனமான டாடா மெமோரியல் சென்டருக்கு ரூ.1,200 கோடி பங்களிப்பதற்கான ஒரு அர்ப்பணிப்பை  ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது. ஐசிஐசிஐ வங்கி, அதன் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து, மகாராஷ்டிராவில் நவி மும்பை, பஞ்சாபில் முல்லன்பூர் ஆந்திரப்பிரதேசத்தில் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் உள்ள டிஎம்சி-இன் மையங்களில் மொத்தம் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் பரவியுள்ள மூன்று புதிய கட்டிட தொகுப்பை   அமைப்பதற்கும் மற்றும் அதிநவீன இயந்திரங்களுடன் அவற்றை நிறுவுவதற்கும் பணத்தை நன்கொடையாக வழங்கும். 

டிஎம்சிக்கு எந்தவொரு நிறுவனத்திலிருந்தும் பெற்றிராத மிகப்பெரிய இந்த பங்களிப்புடன், ஐசிஐசிஐ வங்கியின் சிஎஸ்ஆர் பிரிவான ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன் ஃபார் இன்க்ளூசிவ் க்ரோத் 2027 ஆம் ஆண்டு நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிற இந்த முயற்சியை செயல்படுத்தும்.

ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன், இந்த உறுதிப்பாட்டை வெளிப்படுத்த டிஎம்சியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன் இன் தலைவர்  சஞ்சய் தத்தா மற்றும் டாடா மெமோரியல் சென்டர் இன் இயக்குநர் டாக்டர். ஆர். ஏ. பட்வே ஆகியோர் ஐசிஐசிஐ வங்கியின் தலைவர்  கிரிஷ் சந்திர சதுர்வேதி மற்றும் ஐசிஐசிஐ வங்கியின் செயல் இயக்குநர்  சந்தீப் பத்ரா ஆகியோரது முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

 ஐசிஐசிஐ ஃபவுண்டேஷன் மகாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள புற்றுநோய்க்கான சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான டிஎம்சி-ன் மேம்பட்ட மையத்தில் ஒரு ஐசிஐசிஐ ரேடியேஷன் ஆன்காலஜி பிளாக்’ ஐ அமைக்கும். இந்த பிரிவு,  சிடி ஸ்கேனர் மற்றும் எம்ஆர்டி உள்ளிட்ட அதிநவீன ஆர்ட்ராடியாலஜி வசதிகள், வெளி நோயாளிகளுக்கான புதிய வசதி, ஆய்வகங்கள் மற்றும் உள்நோயாளிகளுக்கான கதிரியக்க சிகிச்சை வசதி ஆகியவையைக் கொண்டிருக்கும்.  பஞ்சாபில் உள்ள முல்லன்பூர் மற்றும் ஆந்திரப்பிரதேசம் விசாகப்பட்டினத்தில் வரும் ஐசிஐசிஐ பீடியாட்ரிக் மற்றும் ஹெமட்டாலஜிக்கல் ஆன்காலஜி  மையங்கள் குழந்தை மற்றும் ரத்தக்கசிவு புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான மேம்பட்ட உபகரணங்கள் மற்றும் சிகிச்சைகளின் ஒரு வரிசையை வழங்கும்.

இந்த விழாவில் பேசிய ஐசிஐசிஐ வங்கியின் தலைவர் கிரிஷ் சந்திர சதுர்வேதி கூறியதாவது, ஐசிஐசிஐ  ஃபவுண்டேஷன் அதன் பல்வேறு முயற்சிகள் மூலம் 10.9 மில்லியனுக்கும் அதிகமான பயனாளிகளுக்கு பயனளித்துள்ளது. நவி மும்பை, முல்லன்பூர் மற்றும் விசாகப்பட்டினத்தில் உள்ள டிஎம்சி-இன் மையங்களில் 2027 ஆம் ஆண்டிற்குள் மூன்று புதிய கட்டிட தொகுப்புகளை கட்டுவதற்கு ரூ.1,200 கோடியை நாங்கள் ஒதுக்குகிறோம். சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, இந்த முயற்சியானது, நோயாளிகளுக்கு மேம்பட்ட மற்றும் சமீபத்திய புற்றுநோய் சிகிச்சைகளுக்கான அணுகலை வழங்குவதன் மூலம் நமது நாட்டின் பல்வேறு பகுதிகளில் விரிவான புற்றுநோய் பராமரிப்பு சேவைகளை மேம்படுத்தும்"என்று கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form