விமானப் பயணத்துக்கு ஈடான அனுபவத்தை உறுதி செய்யும் நியூகோ



கிரீன்செல் மொபிலிட்டி வழங்கும் இந்தியாவின் முன்னணி பிரீமியம் எலக்ட்ரிக் பஸ் பிராண்ட் நியூகோ விமானப்பயண வசதி அனுபவத்தை வழங்கு உறுதி செய்கிறது. நியூகோ பாதுகாப்பு, நவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பம் மற்றும் ஈடு இணையில்லாத சேவைகளை தொடக்கம் முதல் இறுதிவரையில் முக்கியத்துவம் அளித்து,   வாடிக்கையாளர்களின் திருப்திக்கு முன்னுரிமை அளிக்கிறது.  பிராண்டு இரைச்சலில்லாத, சுற்றுச்சூழலுக்கு இணக்கமான மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் கூடிய,  மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகளை  வழங்கி, மக்களின் போக்குவரத்து செயல்பாடுகளில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

நியூகோபேருந்துகள் சிறப்பாக செயல்படும் நிலையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய ஒவ்வொரு புறப்பாட்டுக்கு முன்பாகவும் 25 மின் மற்றும் இயந்திர இயக்க சோதனைகளை மேற்கொள்வது, பேருந்துகளை தொடர்ந்து கண்காணிக்க நிகழ்நேர கண்காணிப்பு அமைப்புகள், ஏடிஏஎஸ் (அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டண்ட்ஸ் சிஸ்டம்ஸ்) என அழைக்கப்படும் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட்  மோதல் தடுப்பு, வேகத்தடை அமைப்பு, பேருந்து ஓட்டுனர்களுக்கு ப்ரீத் அனலைசர், சிசிடிவி கவனக்கண்காணிப்பு, மேம்பட்ட தீ தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு, பேட்டரி வெப்பநிலை கட்டுப்பாட்டு அமைப்பு என பல வசதிகளைக் கொண்டுள்ளது. மேலும் லெக் ஸ்பேஸ், சாய்வு இருக்கைகள் மற்றும் மொபைல் சார்ஜிங் பாயின்ட்கள் அமைந்துள்ளன.  

கிரீன்செல் மொபிலிட்டியின் தலைமை செயலதிகாரியும் நிர்வா இயக்குனருமான தேவேந்திர சாவ்லா கூறுகையில், " இந்தியாவின் முன்னணி பிரீமியம் எலக்ட்ரிக் பஸ் பிராண்டாக, எங்கள் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சிறந்த பயண அனுபவத்தை வழங்குவதில் பெருமை கொள்கிறோம். எங்களின் அதிநவீன ஸ்டேட் ஆஃப் தி ஆர்ட் தொழில்நுட்பம் மற்றும் தலை சிறந்து செயல்படுவதில் எங்குக்குள்ள அசைக்க முடியாத உறுதிப்பாட்டுடன்,  பாதுகாப்பு, சொகுசு, மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆகியவற்றை ஒன்றிணைத்து, மக்களின் போக்குவரத்து முறையை மறுவரையறை செய்வதை எங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். நியூகோ வெறும் போக்குவரத்து வசதிக்கான ஒன்று மட்டுமல்ல; பசுமையான மற்றும் சிறப்பான மேம்பட்ட இந்தியாவை உருவாக்கும் எங்கள் தொலைதூர பார்வைக்கான  ஒரு சாசனமுமாகும்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form