தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு பெண்கள் அணி வெற்றி


திருத்தங்கல் ஹட்சன் டென்னிகாய்ட் அகாடமியில் உள்ள சிவநேச பாண்டியன் டென்னிகாய்ட் அரங்கில் ஜூன் 16,2023 முதல் 18வரை 25வது தென் மண்டல சீனியர் தேசிய டென்னிகாய்ட் சாம்பியன்ஷிப் 2023-2024 போட்டி நடைபெற்றது. 

போட்டியின் போது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் முதல் 6 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் பங்கேற்றனர்.இந்த வீரர்கள் அடுத்தடுத்த சுற்றுகளில் விளையாடினர். முதல் மற்றும் இரண்டாவது இடத்தைப் பெற்ற வீரர்கள் ஒற்றையர் அணி சாம்பியன் போட்டியிலும், 3 மற்றும் 4 வது இடத்தைப் பெற்ற வீரர்கள் இரட்டையர் அணி சாம்பியன் போட்டியிலும், 5 இடத்தைப் பெற்ற வீரர் கலப்பு இரட்டையர் போட்டியிலும், 6 வது இடத்தைப் பெற்ற வீரர் மிக்ஸ் டீம் போட்டியில் பங்குபெற்று விளையாடினர்.

இதில் பெண்கள் பிரிவில் தமிழ்நாடு  அணி வென்றது. அதே பிரிவில் இரண்டாவது பரிசை கர்நாடகாவும், மூன்றாவது பரிசை கேரளாவும் வென்றன ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணி முதல் பரிசைப் பெற்றது. ஆண்கள் பிரிவில் இரண்டாவது பரிசை தமிழ்நாடும், மூன்றாவது பரிசை பாண்டிச்சேரியும் வென்றன. மேலும் கலப்பு இரைட்டையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அபிஷேக், மேனகா முதல் பரிசையும், கர்நாடகாவைச் சேர்ந்த தனுஷ், லத்திகா  இரண்டாவது பரிசையும், புதுச்சேரியைச் சேர்ந்த செல்வகுமார், கீதா மூன்றாவது பரிசையும் வென்றனர்.  28 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணி வென்றது.

ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் பேசுகையில், “வெற்றி பெற்றவர்களுக்கும்பங்கேற்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பங்கேற்பாளர்கள் வெளிப்படுத்திய விளையாட்டு மனப்பான்மையின் காரணமாக போட்டி விறுவிறுப்பாகவும் ஆற்றல் நிறைந்ததாகவும் இருந்தது. விளையாட்டின் முக்கியத்துவத்தையும் ஒரு தனிநபரின் முழுமையான வளர்ச்சியில் அது எவ்வளவு முக்கியமானது என்பதையும் மக்கள் அறிய வேண்டும் என விரும்புகிறேன்.சிறந்த  அகாடமியாக, விளையாட்டைப் பிரபலப்படுத்தவும்,விளையாட்டுத் திறனை வளர்ப்பதற்கும் தேவையான அனைத்தையும் நாங்கள் செய்வோம்” எனக் கூறினார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form