திருச்சி மங்கள் அண்ட் மங்களில் ப்ரீத்தி சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் மிக்சர் கிரைண்டர்கள் அறிமுகம்

நாட்டில் சமையலறை சாதனங்களில் முன்னணி நிறுவனமான ப்ரீத்தி,   ப்ரீத்தி சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் என்ற பெயரில் மிக்சர் கிரைண்டர்களை   அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. திருச்சியில்  மிகப்பிரபலமான மங்கள் அண்ட் மங்கள் வணிக வளாகத்தில் ஏப்ரல் 27 அன்று  ப்ரீத்தி நிறுவனத்தின் வர்த்தக பிரிவு தலைவர் ஸ்வேதா சாகர் மற்றும் மங்கள் அண்ட் மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை தலைமையில் இதற்கான நிகழ்வு  நடைபெற்றது.

2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ப்ரீத்தி சோடியாக் பிராண்ட் 10 லட்சத்திற்கும் அதிகமான யூனிட் விற்பனையாகி மிக்சர் கிரைண்டர் சந்தையில் நம்பிக்கையான பெயராக மாறியுள்ளது. புதுமை, தரம் மற்றும் சேவைக்கு பெயர் பெற்ற ப்ரீத்தி, இப்போது சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் என்ற புரட்சிகரமான கருத்தாக்கத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இது நுகர்வோர் தங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப மிக்சர் கிரைண்டரை தனிப்பட்ட முறையில் பயன்படுத்திக்கொள்ளவும் தங்களுக்கு ஏற்றவகையிலான மிக்சர் கிரைண்டர்களை தேர்வுசெய்து பயன்படுத்தவும் அனுமதிக்கிறது. சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் அனைவரையும் கவர்ந்திழுக்க் கூடிய 6 மெட்டாலிக் வண்ணங்களில் கிடைக்கிறது. இதிலிருந்து தங்களுக்கு விருப்பமான  சாதனத்தை நுகர்வோர் தேர்வு செய்யலாம். மேலும் தங்களுக்கு விருப்பமான தனித்துவமான தேவையை அதில் சேர்க்கலாம். பிசைதல், நறுக்குதல், வெட்டுதல், அரைத்தல், நறுக்குதல், ஜூஸ் செய்தல், கலக்குதல், பிரித்தெடுத்தல் போன்ற பலதரப்பட்ட அம்சங்களுடன் தங்கள் விரும்பு ஜாடிகளுடன் இவற்றை தேர்வு செய்யலாம்.

ப்ரீத்தியின் உயர்ந்த தரம் மற்றும் புதுமையான வடிவமைப்பு ஆகியவற்றுடன் கூடிய  இந்த தயாரிப்பு நுகர்வோருக்கு சமையல் அனுபவத்தை  மேலும் மேம்படுத்துவது உறுதி என்று அறிமுகம் நிகழ்ச்சியில் பேசிய ப்ரீத்தி வர்த்தக பிரிவு தலைவர் செல்வி ஸ்வேதா சாகர் கூறினார்.  

"தனிப்பட்ட முறையில்  சமையலறை உபகரணங்களை விரும்பும் எங்களது அதிகமான வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ள ப்ரீத்தி சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் சாதனங்களை அறிமுகப்படுத் துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த சாதனங்களின் விற்பனை சமீபத்தில் 10 லட்சத்தை எட்டியது. ப்ரீத்தியை ஒரு பிராண்டாக நுகர்வோர் கொண்டுள்ள நம்பிக்கைக்கு சான்றாக சோடியாக் விளங்குகிறது.  தனித்துவமான சோடியாக் கஸ்டமைசபிள்ஸ்  மிக்சர் கிரைண்டர்கள் அதன் அசத்தலான வண்ணத் தேர்வுகள், பல்வேறு அம்சங்கள் மற்றும் ஜாடிகளைத் தேர்ந்தெடுக்கும் விருப்பம் ஆகியவை எங்களது நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர்களின் சமையல் அனுபவத்தை மட்டுமல்ல, அவர்களின் சமையலறையின் ஒட்டுமொத்த தோற்றத்தையும் உணர்வையும் மேம்படுத்தவும் இது பயன்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மங்கள் அண்ட் மங்கள் உரிமையாளர் பி.மூக்கப்பிள்ளை கூறுகையில், "எங்கள் கடையில் ப்ரீத்தி சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் மிக்சர் கிரைண்டர்களை அறிமுகம் செய்யும் விழாவை நடத்துவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எங்கள் வாடிக்கையாளர்கள்  எப்போதும் புதிய மற்றும் புதுமையான தயாரிப்புகளைத் தேடுகிறார்கள், மேலும் ப்ரீத்தி சோடியாக் கஸ்டமைசபிள்ஸ்  வகை மிக்சர் கிரைண்டர்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் என்று நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ப்ரீத்தி சோடியாக் கஸ்டமைசபிள்ஸ் மிக்சர் கிரைண்டர்கள் நுகர்வோருக்கு ஆன்லைனில் மட்டுமின்றி ஆஃப்லைனில் அனைத்து முன்னணி விற்பனை நிலையங்களிலும் கிடைக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form