ஓபோ, ஒரு உலகளாவிய ஸ்மார்ட்-டிவைஸ் பிராண்ட், கவுன்டர்பாயிண்ட் என்ற ஆய்வு நிறுவனத்துடன் இணைந்து, குறைந்த பேட்டரி கவலையிலிருந்து உருவாகும் நோமோபோபியா குறித்த நுகர்வோர் ஆய்வை வெளியிட்டிருக்கிறது. இந்தியாவில் நான்கு பேரில் மூன்று பேருக்கு நோமோபோபியா உள்ளது. தங்கள் ஸ்மார்ட்போனிலிருந்து தாங்கள் துண்டிக்கப்பட்டு விடுவோமோ என்ற பயம் இருப்பதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அறிக்கை- நோமோபோபியா என்ற தலைப்பில் : சக்தியை இழக்கும் பேட்டரிகள் எப்படி இந்த அச்சத்திற்கான முக்கிய காரணமாக மாறியது என்பதைப் புரிந்துகொள்வதற்காக நுகர்வோரின் மனநிலையை ஆராய, லோ பாட்டரி ஆன்சைடி கஸ்டமர் ஸ்டெடி என்ற இந்த ஆய்வை மேற்கொண்டது .
அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஓபோ இந்தியாவின் சிஎம்ஓ, தமியாந்த் சிங் கானோரியா, ஓபோ அதன் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளினால் தன்னைப் பெருமை படுத்திக்கொண்டிருப்பதுடன் நுகர்வோர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்காக நாங்கள் இம்மாதிரியான ஆய்வுகளை இடைவிடாமல் தொடர்ந்து சார்ந்திருக்கிறோம். உலகிற்கு நீடித்த மதிப்புடன் கூடிய, உதவும் வகையிலான தயாரிப்புகள் மற்றும் அனுபவங்களை உருவாக்கித் தருவதே எங்கள் நோக்கம். இந்த ஆய்வு நோமோபோபியாவின் நுணுக்கங்களைப் பற்றிய மதிப்புமிக்க ஆழமான புரிதல்களை வழங்குவதுடன், வெளிப்படுத்தப்பட்ட இந்த தேவைகள் மற்றும் சிக்கல்களை தீர்ப்பதற்கான தீர்வுகளை வழங்குவதற்கு உதவியாக இருக்கும்" என்றார்.
65% ஸ்மார்ட்ஃபோன் பயனர்கள் தங்கள் பேட்டரி தீர்ந்துவிட்டால்- உணர்ச்சி ரீதியாக-கவலை/பதற்றம், இணைப்பற்ற, உதவியற்ற, தவறவிட்டுவிடுவோமோ என்ற பயம், பதட்டமான, பாதுகாப்பற்ற-அசௌகரியம் போன்ற உணர்வுகளை அனுபவிக்கிறார்கள்
பதிலளித்தவர்களில் 42% பேர் பொழுதுபோக்கிற்காக ஸ்மார்ட்ஃபோன்களைப் பயன்படுத்துகின்றனர், இதில் சமூக ஊடகங்கள் முதலிடத்தில் உள்ளன. 65% பயனர்கள் பேட்டரியைச் சேமிப்பதற்காக ஃபோன் பயன்பாட்டைத் தியாகம் செய்கிறார்கள், அதே நேரத்தில் 82% பேர் சமூக ஊடகப் பயன்பாட்டின் அளவை குறைத்துக்கொள்கிறார்கள்.
குறைந்த பேட்டரி பற்றிய கவலை குறித்து கருத்து தெரிவித்த ஆராய்ச்சி இயக்குனர் தருண் பதக், "நமது ஸ்மார்ட்போன்கள் நம்முடைய தனிப்பட்ட உலகமாக மாறிவிட்டன. இவை தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும், பொழுதுபோக்குக்காகவும் அதனுடன் இணைந்திருக்கும்படி செய்திருக்கின்றன. இதன் விளைவாக, நம்மில் பலருக்கு தொலைபேசி இல்லாமல் இருப்பதில் ஒருவித பயம் உருவாகியுள்ளது. அடிக்கடி பேட்டரி தீர்ந்துவிடுவதன் காரணத்தால் தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தினால் மக்கள் மிகவும் கவலையடைகிறார்கள். குறைந்த பேட்டரி கவலை பற்றிய உணர்வானது 31 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களிடையேயும் அதைத் தொடர்ந்து 25 முதல் 30 வயதுடையவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது," என்றார்.