ஜேஇ இ மெயின்ஸ் தேர்வில் 14000 அன்அகாடமி லேனர்ஸ் தேர்ச்சி



ஜேஇஇ மெயின் 2023 தேர்வில் 14,000க்கும் அதிகமான தனது லேர்னர்கள் தர வரிசைப் பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளதாக இந்தியாவின் மிகப் பெரிய கற்றல் தளமான அன்அகாடமி அறிவித்துள்ளது. இதன் மூலம் 2023 ஜேஇஇ அட்வான்ஸ்ட்க்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.  அன்அகாடமி தர வரிசைப் பட்டியலில் இஷான் காண்டெல்வால் (ஏஐஆர் 11), தேஷாங்க் பிரதாப் சிங்க் (ஏஐஆர் 12) மற்றும் நிபுண் கோயல் (ஏஐஆர் 13) ஆகியோர் முன்னிலை இடங்களைப் பிடித்துள்ளனர்.  

1450 லேர்னர்கள் 99 சதவிகிதம் மற்றும் அதற்கு அதிகமான, 120க்கு அதிகமான  லேர்னர்கள் 99.9 சதவிகிதம் மற்றும் அதற்கு அதிகமான, மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.  மேலும், 5 லேர்னர்கள் டாப் 10 தர வரிசைப் பட்டியலிலும், 91 லேர்னர்கள் டாப் 1000 தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.

ஜேஇஇ தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான முன்னணி ஆன்லைன் தளமாக அன்அகாடமி விளங்குகிறது. பியூஷ் மகேஷ்வரி, பிரிஜேஷ் ஜிண்டால், முகம்மது காஷிஃப் ஆலம் உள்ளிட்ட பல முன்னணி கல்வியாளர்கள் மூலம் லேர்னர்கள் தங்களது கல்விப் பயணத்தில் இப்போது சிறக்க முடிகிறது. மேலும், சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் தொடங்கப்பட்ட அன்அகாடமி மையங்கள் காரணமாக, ஜேஇஇ லேர்னர்கள் உயர் தொழில்நுட்பக் கட்டமைப்பு மூலம் பிரிமியம் கற்றல் அனுபவத்தைப் பெறுவதற்கான அணுக்கத்தையும் பெறுவர் என அன் அகாடமி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form