சிவகாசியில் 261 இளம் வீரர்கள் பங்கேற்ற சப்-ஜூனியர் ஓபன் பேட்மிண்டன் போட்டி


 அருண் ஐஸ் கிரீம்ஸ் சப்-ஜூனியர் ஓபன் மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில் பல்வேறு பிரிவுகளில் போட்டியாளர்கள் வெற்றி பெற்றனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசி திருத்தங்கலில் உள்ள ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் மார்ச் 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 261 வீரர்கள் கலந்து கொண்டனர்.

வளரும் பேட்மிண்டன் ஆர்வலர்கள் யு-11 ஆண்கள் ஒற்றையர், யு -11 பெண்கள் ஒற்றையர், யு -13 ஆண்கள் ஒற்றையர், யு -13 பெண்கள் ஒற்றையர், யு -13 ஆண்கள் இரட்டையர், யு -13 பெண்கள் இரட்டையர், யு -15 ஆண்கள் ஒற்றையர், யு-15 பெண்கள் ஒற்றையர், யு-15 ஆண்கள் இரட்டையர் மற்றும் யு-15 பெண்கள் இரட்டையர் ஆகிய பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் ரூ. 1.5 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்தப் போட்டிக்கு அருண் ஐஸ்க்ரீம்ஸ் ஸ்பான்சர் செய்தது.

போட்டி குறித்து பேசிய ஹட்சன் பேட்மிண்டன் மையத்தின் தலைமை ஆலோசகர் அஜித் ஹரிதாஸ், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியிலிருந்து பல திறமைசாலிகளை காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வெற்றியாளர்கள் வெளிப்படுத்திய வேகம், நுட்பங்கள் மற்றும் விளையாட்டுத்திறன் மிகவும் பாராட்டுக்குறியது. பேட்மிண்டன் போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் வரும் காலங்களில் விளையாட்டை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வார்கள் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஹட்சன் அக்ரோ புராடக்ட்ஸ் லிமிடெட் தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் பங்கேற்பாளர்கள் அனைவரையும் அவர்களின் இந்த முயற்சிகளுக்காகப் பாராட்டிப் பேசினார். "இந்த போட்டியை நடத்துவது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. வரும் காலங்களில் இந்தியாவுக்காக பேட்மிண்டன் விளையாடி பதக்கங்களை வெல்ல வீரர்களை நாங்கள் ஊக்குவிக்க விரும்புகிறோம். ஹட்சன் பேட்மிண்டன் அகாடமி, சிறந்த அகாடமியாக, விளையாட்டு வீரர்களுக்கு தொடர்ந்து பயிற்சி அளிக்கும்” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form