டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் புதிய மின்சார ஸ்கூட்டர் அறிமுகம்



டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது பிரதான மின்சார ஸ்கூட்டரான டிவிஎஸ் ஐக்யூப்-ன் புதிய வகையை 3.1 கேடபிள்யுஎச் பேட்டரியுடன் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த புதிய வகை டிவிஎஸ் ஐக்யூப், ஒரு முறை சார்ஜ் செய்தால் 123 கிமீ தூரம் வரை பயணிக்கும் ஐடிசி வரம்பை அளிப்பதோடு,  மலை போன்ற மேடுப்பகுதிகளில் பயணிக்கும் போது பின்னோக்கி கீழே செல்லாமல் தடுக்க உதவும் ஹில் ஹோல்ட் அம்சத்துடன், இரு வண்ணங்களின் அழகை வெளிப்படுத்தும் டுயல் டோன் வடிவமைப்புடன் அறிமுகமாகியுள்ளது.

புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ள இந்த அம்சங்கள் இந்நிறுவனத்தின் தயாரிப்பு பட்டியலில் உள்ள மின்சார வாகனங்களின் பயணிக்கும் தூர அளவை அதிகரித்து இருப்பதோடு, நவீன அம்சங்களை கொண்ட மின்சார ஸ்கூட்டராக தரம் உயர்த்தி இருக்கின்றன. புதிய மின்சார ஸ்கூட்டரின் அறிமுகம் மூலம், டிவிஎஸ் ஐக்யூப் வாகன வரிசையில், இப்போது சந்தையில் கிடைக்கும் வாகன வகைகளின் எண்ணிக்கை ஆறு ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிவிஎஸ் ஐக்யூப் வாகன பட்டியலானது அதிக வகைகளைக் கொண்ட,  மிகவும் கவர்ச்சிகரமான ஒன்றாக கவனத்தை ஈர்க்கிறது.

600,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விற்பனையாகிருப்பதோடு,1900-க்கும் மேற்பட்ட டச் பாயிண்டுகளில் சேவைகளை வழங்கி வருவதால், டிவிஎஸ் ஐக்யூப் இந்தியாவின் மிக விருப்பமான குடும்ப மின்சார வாகனமாக (இவி) தனது இடத்தை தொடர்ந்து தக்கவைத்திருக்கிறது. மேலும்இந்தியாவில் மாசு இல்லாததூய்மையான போக்குவரத்தை முன்னெடுப்பதில், நிகழ்ந்து வரும் மாற்றத்தைத் துரிதப்படுத்தி வருகிறது. நம்முடைய அன்றாட போக்குவரத்திற்காகவே பிரத்தியேகமாக  வடிவமைக்கப்பட்டிருக்கும் டிவிஎஸ் ஐக்யூப் 3.1 கேடபியுஎச், 1,03,727 ரூபாய் (டெல்லி) எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்குகிறது. இந்த ஸ்கூட்டர் பேர்ல் ஒயிட், டைட்டானியம் க்ரே, மற்றும் பீஜ் உடன் ஸ்டார்லைட் ப்ளூமற்றும் பீஜ் உடன் காப்பர் ப்ரான்ஸ்ஆகிய இரு டுயல்-டோன் வண்ணங்களில் கிடைக்கின்றன.

புதிய வாகன அறிமுகமானது, டிவிஎஸ் ஐக்யூப் வாகன வரிசையில் பல்வேறு எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேம்படுத்தப்பட்ட பேட்டரி திறன், அதிக தூரம் பயணிக்கும்ஆற்றல் மற்றும் டுயல்-டோன் வண்ணங்கள் மற்றும் பேக்ரெஸ்ட் போன்ற வடிவமைப்பு மேம்பாடுகளுடன் அசத்தலான ஒன்றாக அறிமுகமாகி இருக்கிறது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form