லண்டனை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான நத்திங், இந்தியாவில் இரு பிரிவுகளை வரையறுக்கும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதல் உண்மையான ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான நத்திங் போன் (3) மற்றும் முதல் ஓவர் - இயர் ஆடியோ சாதனமான நத்திங் ஹெட்போன் (1) ஆகிய இரு தயாரிப்புகளும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட தோற்றமும், உறுதியான புதுமையும் மூலம் நுகர்வோர் தொழில்நுட்பத்தை மறுபரிசீலனை செய்யும் நத்திங் நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றன.
நத்திங் போன் (3) சிறந்த ஸ்மார்ட்ஃபோன் தொழில்முறை தரம் கொண்ட மூன்று கேமரா அமைப்புடன், முழுமையான ஆப்டிக்கல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் வருகிறது. இதில் ஒளியீட்டும் பிரதான சென்சார், இழப்பில்லா ஆப்டிக்கல் ஜூம், மற்றும் எல்லா லென்ஸ்களிலும் 4கே 60 எப்பிஎஸ் சினிமாடிக் வீடியோ கேப்பிங் வசதிகள் உள்ளன. 6.67இஞ்ச் அமோல்ட் டிஸ்ப்ளே மற்றும் அல்ட்ரா - நேர்த்தியான பெசல்களுடன், மேலும் அதிநவீன ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 சிப்செட் சேர்ந்து, உயர்தர பிரீமியம் மாடுலர் வடிவமைப்பில் இந்த ஃபோனை உருவாக்குகின்றன. இந்த போன் 12 ஜிபி, 256 ஜிபி ரூ.62,999க்கும், 16ஜிபி, 512 ஜிபி ரூ.72,999க்கும் கிடைக்கும்.
சிறப்பு வெளியீட்டு சலுகையாக, ஜூலை 15ம்தேதி முதல் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு நத்திங் இயர் (ரூ. 14,999 மதிப்புள்ளது) முற்றிலும் இலவசமாக வழங்கப்படும்.
நத்திங் ஹெட்போன் (1)ஆனது நத்தங் நிறுவனம், ஓவர் - இயர் ஆடியோ பிரிவில் அடி எடுத்து வைக்கும் முக்கிய முன்னேற்றத்தைக் குறிக்கிறது. கேஇஎப் உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இதில் 35 மணி நேரம் வரை ப்ளேபேக் நேரம் கிடைக்கும். மேலும், வெறும் 5 நிமிட வேக சார்ஜில் 2.4 மணி நேரம் வரை கேட்கக்கூடிய வசதியும் உள்ளது.
இரு சாதனங்களை ஒரே நேரத்தில் இணைக்கும் வசதி, ஏஐ இயக்கப்படும் அழைப்பு தெளிவுத்தன்மை, மற்றும் சேனல் ஹாப் மற்றும் மேம்பட்ட ஈக்யூ போன்ற செயலி சார்ந்த தனிப்பயனாக்கம் செய்யக்கூடிய கருவிகள் வசதி மற்றும் இவை அனைத்தும் உபயோகத்தில் வசதியும், அனுபவத்தில் தனித்தன்மையையும் ஏற்படுத்துகின்றன. இந்த ஹெட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிற விருப்பங்களில் இந்திய சந்தையில் ரூ.21,999 விலையில் கிடைக்கும். ஜூலை 15, 2025 அன்று இந்த ஹெட்போன் ரூ.19,999 என்ற சிறப்பு விலையில் அறிமுக தின சிறப்பு சலுகையாக வழங்கப்படும்.
பிளிப்கார்ட், ப்ளிப்கார்ட் மினிட்ஸ், மைந்த்ரா, விஜய் சேல்ஸ், க்ரோமா மற்றும் அனைத்து முன்னணி மொபைல் மற்றும் ரீடைல் அங்காடிகள் வழியாக இரு தயாரிப்புகளும் விற்பனைக்கு வரும்.