கரூர் வைசியா பேங்க் (கேவிபி) மற்றும் ஷேமா ஜெனரல் இன்சூரன்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள், இந்தியாவின் கிராமப்புற மற்றும் விவசாயம் சார்ந்த சமூகங்களுக்காக ஒரு சிறப்பாக வடிவமைக்கப்பட்ட இரட்டை பலன் காப்பீட்டுத் திட்டமான " ஷேமா கிசான் சாத்தி " திட்டத்தை வழங்குவதற்கு ஒரு உத்தி மிகுந்த பேங்க்கஸுரன்ஸ் கூட்டணியை அறிவித்துள்ளன.
இந்தக் கூட்டாண்மை இந்தியாவின் கிராமப்புறப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கான கேவிபி இன் நீண்டகால உறுதிப்பாட்டை முக்கியப்படுத்திக் காட்டுகிறது. 109 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பாரம்பரியத்தைக் கொண்ட கரூர் வைசியா பேங்க், நம்பிக்கை மற்றும் சேவை ஆகியவற்றில் ஆழமாக வேரூன்றுகின்ற அதே வேளையில், தனது வாடிக்கையாளர்கள் தளத்தின் அதிகரித்து வருகின்ற தேவைகளைப் பூர்த்தி செய்ய தொடர்ந்து முன்னேறி வருகிறது. இந்த ஒத்துழைப்பு, விவசாய சமூகத்திற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தயாரிப்புடன், இந்தியாவின் பேங்க்கஸுரன்ஸ் துறையில் ஒரு உத்தி மிகுந்த கூட்டாண்மை மூலம் ஒரு புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வருகிறது.
இந்தக் கூட்டணி குறித்துப் பேசிய கரூர் வைஸ்யா பேங்க் இன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரமேஷ் பாபு, “ஷேமா கிசான் சாத்தி திட்டத்தின் மூலம், நாங்கள் வழங்குவது வெறும் காப்பீட்டுத் திட்டத்தை மட்டுமல்ல; நாங்கள் மன அமைதியையும் வழங்குகின்றோம். நிலையான வாழ்வாதாரத்தை ஆதரிக்கும் அர்த்தமுள்ள நிதி சுற்றுச்சூழல் அமைப்புகளை உருவாக்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இந்தக் கூட்டாண்மை பிரதிபலிக்கிறது” என்றார்.
இந்த கூட்டாண்மை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் காப்பீட்டு அணுகலை விரிவுபடுத்துகிறது மற்றும் 2047 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் காப்பீடு என்பதை அடைவதற்கான தேசிய முயற்சிகளை நிறைவு செய்கின்ற அரசு மற்றும் IRDAI யின் சமீபத்திய கொள்கை வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது. நம்பகமான நிதி இடை நடுவத்துவத்தில் கேவிபியின் தலைமைத்துத்துடன், அதன் வாடிக்கையாளரே-முதல் அணுகுமுறையும் இணைந்து, இந்த திட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதில் தனித்துவமாக நிலைநிறுத்துகிறது.