இன்றைய இளைஞர்களிடையே நிதி அறிவை ஊக்குவிக்கும் முயற்சியாக, சிடிஎஸ்எல் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியம் (சிடிஎஸ்எல் ஐபிஎப்),தமிழ்நாட்டின் ஈரோட்டில் உள்ள கொங்கு பொறியியல் கல்லூரியில் முதலீட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சி, "முதலீடுகளின் அடிப்படைகள் மற்றும் டெபாசிட்டரி சேவைகள்" என்ற தலைப்பில் நடைபெற்றது. மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தமிழில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில், முதலீட்டு குறித்த முக்கியமான கருப்பொருட்கள் மற்றும் டெபாசிட்டரி சேவைகள் என்னும் பரிமாற்றத் துறையின் பங்கு எளிய முறையில் விளக்கப்பட்டது.
இந்த முயற்சியின் நோக்கம், மாணவர்கள் நிதி திட்டமிடலைப் பற்றிய சிந்தனையை இளமையிலேயே வளர்த்துக்கொள்வதற்கும், பாதுகாப்பான மற்றும் தகவல் அடிப்படையிலான முதலீட்டு முடிவுகளை எடுக்க தேவையான அறிவையும் நம்பிக்கையையும் அளிப்பதற்கும் ஆனது.
இந்திய மூலதன சந்தைகள் குறித்த விழிப்புணர்வை பரப்புவதில் சிடிஎஸ்எல் முதலீட்டாளர் பாதுகாப்பு நிதியம் தொடர்ந்து முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. இந்த வகை பகுதி அடிப்படையிலான விழிப்புணர்வு முயற்சிகள் மூலம், இந்தியாவில் உள்ள முதலீட்டாளர்கள் “ஆத்மநிர்பர்” முதலீட்டாளர்கள் ஆகும் நோக்கில் அறிவூட்டும் பணியில் சிடிஎஸ்எல் ஐபிஎல் தன்னலம் காணாமல் செயல்பட்டுவருகிறது.
இந்த முயற்சியின் தொடர்ச்சியாக, வரவிருக்கும் மாதங்களில் நாட்டின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.