ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இந்தியாவில் தனது 25வது ஆண்டு விழாவையும், உலகளவில் 130வது ஆண்டு விழாவையும் கொண்டாடும் வேளையில், ஆக்ஸெலரேட்டரில் தனது கால்களை பதித்துள்ளது. 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 36,194 க்கும் மேலான வாகனங்களை விற்பனை செய்து, ஸ்கோடா ஆட்டோ-ஆனது இந்தியாவில் அதன் 25 ஆண்டு வரலாற்றில் அதன் அதிகபட்ச அரை ஆண்டு விற்பனையை எட்டியுள்ளது.
இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிராண்ட் இயக்குனர் ஆஷிஷ் குப்தா கூறியதாவது, “எங்கள் மைல்கல் அரையாண்டு விற்பனையானது, இந்தியாவில் ஸ்கோடா தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளர்கள் வலுவாக ஏற்றுக்கொள்வதை பிரதிபலிக்கிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு நாளும் தங்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய விரும்புகிறார்கள். எங்கள் போர்ட்ஃபோலியோவில் கைலாக் சேர்க்கப்பட்டதன் மூலம், 'அனைவருக்கும் SUV' எனும் மந்திரம் மற்றும் எங்கள் செடான் சலுகை ஆகியவற்றின் மூலம் அவர்களின் பயணங்களை இப்போது இன்னும் அதிகமாக்குகிறோம். நாடு முழுவதும் எங்கள் அணுகக்கூடிய தயாரிப்புகள், சேவைகள் மற்றும் டச் பாயிண்ட்கள் மூலம் இந்தியாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களுடன் 'நெருக்கமாக' இருப்பதே எங்கள் நோக்கமாகும். இந்த சாதனையானது, சமயோஜிதமான தயாரிப்பு நடவடிக்கைகள் மூலம் பொருத்தமானதாக இருப்பதில் கவனம் செலுத்தவும், எங்கள் தயாரிப்பு மற்றும் சேவை சலுகைகளை ஒப்பற்றதாக செய்வதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான மதிப்பை வழங்கவும், இணையற்ற ஓனர்ஷிப் அனுபவத்துடன் நம்பிக்கையைத் தொடர்ந்து வளர்க்கவும் ஊக்குவிக்கிறது” என்றார்.
2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 36,194 வாகனங்களுக்கு மேலான விற்பனையுடன் ஸ்கோடா ஆட்டோ இந்தியா, இப்போது இந்தியாவின் முதல் ஏழு ஆட்டோமோட்டிவ் பிராண்டுகளில் ஒன்றாக உள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் அதன் தரவரிசையிலிருந்து நான்கு இடங்கள் முன்னேறியுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டில் ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் சிறந்த அரையாண்டு விற்பனையான 28,899 வாகன விற்பனையை முந்தியுள்ளது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2025 ஆம் ஆண்டை கைலாக் அறிமுகத்துடன் தொடங்கியது; இது அதன் முதல் சப்-4 மீட்டர் எஸ்யூவி மற்றும் ஸ்கோடா குடும்பத்தில் வாடிக்கையாளர்களுக்கான புதிய நுழைவுப் புள்ளியாகும். இதுவே இந்த பிராண்ட் டயர் 1 சந்தைகளில் ஊடுறுவிச் சென்று டயர் 2 மற்றும் 3 மையங்களில் மேலும் விரிவடைய உதவுகிறது. இதைத் தொடர்ந்து முற்றிலும் புதிய, இரண்டாம் தலைமுறை கோடியாக் லக்ஸுரி 4 எக்ஸ் 4 அறிமுகப்படுத்தப்பட்டது. குஷாக்குடன், ஸ்கோடா ஆட்டோ இந்தியா இப்போது நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களின் மாறுபட்ட மொபிலிட்டி தேவைகளுக்கேற்ற பரந்த அளவிலான எஸ்யுவிக்களின் வரம்பை வழங்குகிறது. மேலும், ஸ்கோடா ஆட்டோ இந்தியா, ஸ்லாவியா செடான் மற்றும் இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ள உலகளாவிய ஒரு ஐகான் ஆகியவற்றுடன் அதன் செடான் மரபை தொடர்ந்து உருவாக்கி வருகிறது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியா, 2021 ஆம் ஆண்டில், 120 டச் பாயிண்டுகளிலிருந்து, தனது நெட்வொர்க்கை இன்றுவரை 295 க்கும் மேற்பட்ட டச் பாயிண்டுகளாக விரிவுபடுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 350 டச் பாயிண்டுகளை அடைவதற்கான அதன் இலக்கில் உறுதியாக இருப்பதன் மூலம், இந்நிறுவனம் இந்தியா முழுவதும் தடையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கான அதன் உறுதிப்பாட்டை வலுப்படுத்துகிறது.