விளம்பரப் படம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரிட்டானியா



இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய பிஸ்கட் பிராண்டான பிரிட்டானியா மேரி கோல்டு, சிந்திக்கத் தூண்டும் காணொளியை மகளிர் தினத்திற்கு மறுநாள் வெளியிட்டுள்ளது. ‘லெட்’ஸ் கீப் இட் கோயிங்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இப்படம்,  ஒரு நாள் மட்டும் மகளிர் தினத்தை கொண்டாட நாம் மேற்கொள்ளும் முயற்சிகள் பற்றி ஒரு ஆற்றல்மிக்க கருத்தை வெளிப்படுத்துகிறது. மும்பையை மையமாகக் கொண்டு செயல்படும் விளம்பர ஏஜென்சி நிறுவனமான தி ஸ்கிரிப்ட் ரூம் இப்படத்தை கருத்தாக்கம் செய்து உருவாக்கியுள்ளது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரப் படமானது, ஒரு கார்ப்பரேட் அலுவலகத்தில் இரண்டு பெண் ஊழியர்கள் - ஒரு அலுவலக உதவியாளர் மற்றும் ஒரு மேலாளர் - இடையே நடக்கும் முன் காலைப்பொழுது உரையாடலாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

மகளிர் தினத்திற்கு அடுத்த நாள் அலுவலகம் முழுவதும் முந்தைய நாள் கொண்டாட்டத்தின் போது விட்டுச் செல்லப்பட்ட காகித தட்டுகள் மற்றும் கைத்துடைத்த நாப்கின்கள் சிதறிக்கிடக்கின்றன. ‘மகளிர் தின நல்வாழ்த்துக்கள்’ என்று சுவற்றில் ஒட்டப்பட்டுள்ள பதாகையைக் காண்பித்து அலுவலக உதவியாளர், மேலாளரிடம் ‘நேற்று அலுவலகத்தில் யாருக்காவது பிறந்தநாளா’ எனக் கேட்கிறார்.  அது பெண்களையும், அவர்களது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளைக் கொண்டாடும் ஒரு தினம் என்பதை அந்த உதவியாளர் கேட்டுத் தெரிந்து கொள்கிறார். அதைக் கேட்டதும் மகிழ்ச்சியடையும் அலுவலக உதவியாளர், கள்ளங் கபடமின்றி மற்றொரு கேள்வியை அந்த பெண் மேலாளரிடம் “மேடம், இதெல்லாம் ஒரு நாளைக்கு மட்டும் தானா?”, என்று கேட்க, ஒரு கணம் மேலாளர் அமைதியாகிறார். சாதாரண கேள்வி தான், ஆனால் முக்கியமான ஒன்று என ஆழமான சிந்தனைக்குப் பிறகு, புன்னகையுடன், “அப்படி இருக்கணும்னு அவசியமில்லை”, என்று பதில் கூறுகிறார்.

பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின், தலைமை மார்கெட்டிங் அலுவலர்,  அமித் தோஷி, இதுபற்றி பேசுகையில், “மகளிர் தின கொண்டாட்டங்களில் பங்கேற்கும் அதேவேளையில் பிரிட்டானியா மேரி கோல்டு - இந்த ஆண்டு ஏதாவது ஒன்றை வித்தியாசமாக செய்து, பெண்களை ஒரு நாள் மட்டும் பாராட்டிக் கொண்டாடும் வழக்கத்தை மாற்ற விரும்பியது. வேலை, குடும்பம் மற்றும் சமூகத்திற்கு ஒரு பெண் வழங்கும் பங்களிப்பைக் கொண்டாட ஒரே ஒரு தருணம் மட்டும் இருந்தால் போதாது. பெண்களை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி எப்போதும் ஏற்பட வேண்டும். வழக்கமாக, மார்ச் 8-ஆம் தேதி மகளிர் தினத்திற்கு மாறாக, நாங்கள் மார்ச் 9-ஆம் தேதி இந்த விழிப்புணர்வூட்டும் விளம்பரப் படத்தை வெளியிடுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்தியாவின் இல்லத்தரசிகளுடன் அர்த்தமுள்ள உறவைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பிராண்டாக, பிரிட்டானியா - மேரி கோல்டு மற்றும் அதன் முன்முயற்சிகளான ‘மேரி கோல்டு மை ஸ்டார்ட்-அப்’ போட்டி போன்றவற்றின் மூலம் பெண்களுக்கு அதிகாரமளிக்கிறது”, என்று கூறினார்.

இந்த படைப்பு குறித்து பேசிய, தி ஸ்கிரிப்ட் ரூம் ஏஜென்சியின் நிறுவனர், ராஜேஷ் ராமசுவாமி, “மகளிர் தினக் கொண்டாட்டம் வானவில்லைப் போல வெவ்வேறு நிறங்களில் பல்வேறு உணர்ச்சிகளைத் தாங்கி வருகிறது.  மகளிர் தினம் கூற வரும் சாராம்சத்தை ஆண்டு முழுவதும் நாம் பின்பற்றாவிட்டால், அந்த தினத்திற்கு எந்தவொரு அர்த்தமும் இருக்காது. இந்த எளிய விஷயத்தை கவனித்ததே ‘தி டே ஆஃப்டர்’ என்கிற அடுத்த நாள் பற்றிய எங்களது யோசனைக்கும் வழிவகுத்தது.  அமித் மற்றும் குழுவினர் சிறிதும் தாமதிக்காமல் உடனே இந்த யோசனைக்கு ஒப்புதல் வழங்கி, முழு மனதுடன் ஆதரவளித்தது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியளித்தது,” என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form