வர்த்தக முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டும் ஆலிஸ் ப்ளூ

 


முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு சந்தையின் ஏற்ற இறக்கம் என்பது புதிதல்ல, ஒழுங்குமுறை மீறல் அல்லது வர்த்தகத்தின் தொடர் மூலதனம் விரையம் போன்ற பல  சாதாரண காரணங்களும் கூட முதலீட்டாளர்களை ஒரு துறையிலிருந்து மற்றொரு துறைக்கு மாறுவதற்கு வழிவகுக்கலாம். ஆனால் பெரிய வர்த்தகம் குறையும் போது அல்லது மந்தநிலை பற்றிய பயம் அதிகரிக்கும் போது, மற்றும் ஆபத்து - நன்மைகளுக்கான சூழ்நிலை நீண்ட காலத்திற்கு சாதகமான வகையில் செயல்படாதபோது, அனைத்து முதலீட்டாளர்களும் மீண்டும் ஒரு எழுச்சியை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

நீண்ட கால முதலீட்டாளர்கள் தவிர்க்க முடியாத ஏற்ற இறக்கங்களைக் கண்டிருந்தாலும், பெரும்பாலான  புதிய முதலீட்டாளர்களுக்கு, சந்தை மாறுபாடுகள் மற்றும் இழப்புகள் என்பது அவர்கள் முதன்முதலாக எதிர்கொள்ளும் கசப்பான  நிகழ்வுகள்  ஆகும். புதிய-இளம் வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு, குறைவான தரகு கட்டணங்களுடன் சேவையளிக்கும் ‘டிஸ்கவுன்ட் புரோக்கிங்’  நிறுவனமான  ஆலிஸ் ப்ளூ, இறங்குமுகத்தில் இருக்கும் பங்கு வர்த்தகத்திலிருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்குகிறது.

சந்தை மந்த நிலையில் இருக்கும்போது, உங்கள் பங்குகளை சரிபார்த்து, எந்தப் பங்குகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை அறிவதே பாதுகாப்பிற்கான முதல் படி ஆகும். உங்கள் போர்ட்ஃபோலியோவை ஆராய்ந்து, பாதுகாப்பானவற்றிலிருந்து அதிக ஆபத்துள்ள பங்குகளை பகுப்பாய்வு செய்யுங்கள், உங்கள் பணத்தை சிறப்பாகச் செயல்படும் பங்குகளுக்கு மறு ஒதுக்கீடு செய்யலாம். ஆலிஸ் ப்ளூ, வர்த்தகர்களுக்கு விரைவான மற்றும் உடனடி தகவல்களை வழங்கும் தளத்தை குறைந்த தரகுக் கட்டணங்களுடன் வழங்க முயற்சிக்கிறது. இது வர்த்தகர்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வர்த்தகத்தில் விரைவாக நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் உதவுகிறது. 

கூடுதலாக  இது சுய-நிர்ணயத் தரகர் நிலைக்கு மாறியதன் காரணமாக, தனது வாடிக்கையாளர்களுக்கு 27 ஜனவரி 2023 முதல் ஜீரோ  கிளியரிங் உறுப்பினர்  கட்டணத்தை வழங்குகிறது. வர்த்தகச் செலவுகளைக் குறைப்பதன் காரணமாக இந்த  ஜீரோ கிளியரிங் உறுப்பினர் கட்டணங்கள் பயனளிக்கக்கூடியதாக   உள்ளது. மறுபுறம், ஒரு சுய-நிர்ணயத் தரகராக ஆலிஸ் ப்ளூ விரைவான வர்த்தக தீர்வுகளை  மேற்கொள்ள  வகை செய்வதுடன் அதன் ஒவ்வொரு வாடிக்கையாளர்களால் செயலாக்கப்படும் ஒப்பந்த நிறைவேற்றத்தையும் விளக்கி  தீர்வு காண முடியும்.

சந்தை அதன் ரோலர்கோஸ்டர் பயணத்தில்  இயக்க நிலையில் இருக்கும்போது முதல் படி, உங்களுக்குச் சொந்தமான நிறுவனங்களை மறுபரிசீலனை செய்வது. தகுதிகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும் மறுபரிசீலனை, மறுமதிப்பீடு செய்த பிறகு, அமைதியாக உட்கார்ந்து சந்தையை கவனிக்க வேண்டும். போர்கள் அல்லது தொற்றுநோய் மற்றும் சீர்குலைக்கும் சாத்தியமான மந்தநிலை நெருக்கடி காரணமாக சமீபத்திய சந்தை ஏற்ற இறக்கம் இன்னும் சந்தையின் கண்ணோட்டத்தை சீர்தூக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறது. 

இருப்பினும், வரவிருக்கும் 2023 வரவுசெலவுத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் சில இடர்தணிப்பு மற்றும் மாற்றங்களையும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில், ஆலிஸ் ப்ளூ போன்ற திறன்மிக்க வர்த்தக தளங்கள் ஆன்லைனில் இறுதிகட்ட வர்த்தகத்தை மேற்கொள்ளும் பங்கு வர்த்தகர்களுக்கு எளிமையான புரோக்கரேஜ் வர்த்தகத் தளத்தையும், ஒற்றை லாபம் என்கிற ‘சிங்கிள் மார்ஜினை’ அளித்து, நிலையற்ற பங்குச்சந்தை நாட்களையும், அதிப்படியான எண்ணிக்கையில் நிகழும் வர்த்தகத்தையும் கையாள உதவுகின்றது என ஆலிஸ் ப்ளூ செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.


Post a Comment

Previous Post Next Post

Contact Form