ஏப்ரல் 28 முதல் ஆரம்பமாகும் ஸ்கோடாவின் சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் சீசன் 2

 


ஸ்கோடா சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் (எஸ்எஸ்டபிள்யூ) கிரிக்கெட் சீசன் 2 போட்டி குறித்த அறிவிப்பை ஸ்கோடா ஆட்டோ இந்தியா அறிவித்துள்ளது. இந்தியா முழுவதுமுள்ள 59 நகரங்களைச் சேர்ந்த 32000க்கும் அதிகமான இளம் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் நோக்கத்துடன் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் சீசன் 2 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 28 முதல் ஆரம்பமாகும். ஸ்கோடா ஆட்டோ இந்தியா போட்டியில் பங்கேற்க விரும்புவோர் சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் மைக்ரோசைட் தளத்தில் டிஜிடலாக முன் பதிவு செய்து கொள்ளலாம். நகரங்களில் நடைபெறும் தொடக்கப் போட்டிகளில் கலந்து கொள்ள அருகிலுள்ள எஸ்எஸ்டபிள்யூ நகரைத் தேர்ந்தெடுத்து www.singlewicket.co.in வலைதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

போட்டியில் பங்கேற்போர் 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்கள், 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் என 3 பிரிவுகளில் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளலாம். வெற்றி பெறுவோர்க்கு ரூ 8 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் ரன்னர்ஸ் அப் ரூ 4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். அனைத்துப் வெற்றியாளர்களுக்கும் கிரிக்கெட் அகாடெமியின் ஸ்காலர்ஷிப் அளிக்கப்படும். ஸ்கோடா ஆட்டோ இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் பிராண்ட் நிலை நிறுத்தம்,  விநியோகஸ்தர்கள், பழுது நீக்கும் சேவை, விற்பனை வலையமைவு உள்ளிட்ட அனைத்தும் விரிவாக மறுசீரமைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்தே ஸ்கோடா சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற  உள்ளன. இந்த சீசனில் புதுமை முயற்சியாக 16 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பங்கேற்கும் சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் கிரிக்கெட் போட்டியை அறிமுகப்படுத்தி உள்ளது.  59 நகரங்களைச் சேர்ந்த மிகச் சிறந்த இளம் கிரிக்கெட் வீராங்கனைகள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

அனைத்துப் பிரிவினர்களுக்கான தொடக்க மற்றும் இறுதிப் போட்டிகள் நடப்பு ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும்.  மொத்தம் 180 ஆண்கள் (12 மற்றும் 16 வயதுக்குக் கீழ்) மற்றும் பெண்கள் (16 வயதுக்குக் கீழ்) மே மாதம் மும்பையில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப் போட்டிகளில் பங்கேற்பர். 12 மற்றும் 16 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், 16 வயதுக்கு உட்பட்ட பெண்களும் பங்கேற்கும் சிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் கிரிக்கெட் போட்டிகள் 6 பந்துகள் பேட்டிங்க் மற்றும் 6 பந்துகள் பௌலிங்க் அமைப்பிலானது. இதில் பங்கேற்போர் தேர்வாளர்கள் முன்னிலையில் தங்களது பேட்டிங்க் மற்றும் பௌலிங்க் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். பேட்டிங்க் மற்றும் பௌலிங்க் செய்த ஒவ்வொரு பாலுக்கும் மதிப்பெண்கள் வழங்கப்படும். போட்டிகள் 59 நகரங்களில் பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்கோடா ஆட்டோ மண்டலங்களில் நடைபெறும்.  

இது குறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியாசின் பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ‘எங்களது ஸ்கோடா ஆட்டோ இந்தியாவில் அனைத்துப் பணிகளிலும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொள்வதுடன், மனித நேய அணுகுமுறையையும் முக்கியமாகக் கடைப்பிடிக்கிறோம். விளையாட்டு என்பது போட்டி மற்றும் திறனுடன், மனித உணர்வையும் கொண்டாடுவதாகும். இளம் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தசிங்கிள் விக்கெட் டோர்னமெண்ட் முனைவு அதிகாரப்பூர்வ மற்றும் வித்தியாசமான தளத்தை வழங்குகிறது. மேலும், இதில் பங்கேற்போர் எதிர்காலத்தில் இன்னும் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க ஊக்கத்தையும், விலை மதிப்பற்ற தருணங்களைக் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுடன் கழிக்க வாய்ப்பையும் அளிக்கும். இந்தியாவில் ஏராளமாக உள்ள இளம் திறனாளிகளுக்கு ஆற்றலையும், ஊக்கத்தையும், ஆதரவையும் அளிப்பதில் பெருமை கொள்கிறோம்‘ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form