200 தொழில்முனைவோர்கள் தங்களின் தயாரிப்புகளை அமேசானின் சர்வதேச இணையதளங்களில் அறிமுகம் செய்யவும் இந்தியாவில் இருந்து உலகளாவிய பிராண்டுகளை உருவாக்கவும் பெண் தொழில்முனைவோருக்கான உலகளாவிய காப்பகமாக விளங்கும் மற்றும் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் நடவடிக்கைகளில் எடுத்துக்காட்டி அவர்களை ஆதரிக்கும் ‘விமனோவேட்டர்’ உடன் அமேசான் இந்தியா இணைவதாக அறிவித்துள்ளது. இதில் கிட்ஸிவின்ஸி, விஷாலா நேச்சுரல்ஸ், ஜெம்ஸ் அண்ட் ஜுவல்ஸ் மற்றும் புங்கோ ஜுங்கோ போன்ற வணிகங்களும் அடங்கும். ஆடை, அழகு, நகைகள், மசாலா பொருட்கள், சுகாதாரம், கைவினைப்பொருட்கள், வீட்டு அலங்காரம் மற்றும் அலுவலக பொருட்கள் போன்ற பல்வேறு தயாரிப்பு வகைகளை இந்த தொழில்முனைவோர் அளிக்கிறார்கள்.
அடுத்த 24 மாதங்களில், அமேசான் விமனோவேட்டருடன் இணைந்து அதன் இணையவழி ஏற்றுமதி திட்டமான குளோபல் விற்பனையில் இந்த தொழில்முனைவோரை சேர்க்கும். அவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும், அவர்கள் ஒரு வலுவான மின்வணிக ஏற்றுமதி வணிகத்தை உருவாக்கும் வகையில் உபகரணங்கள்கள் மற்றும் தொழில்நுட்பங்களையும் அமேசான் வழங்கும். இதில் இ-காமர்ஸ் ஏற்றுமதியின் நுணுக்கங்கள் குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் கூடுதல் செலவின்றி தயாரிப்புகள், விலை நிர்ணயம், குளோபல் லாஜிஸ்டிக்ஸ்கள் மற்றும் பலவற்றைப் பட்டியலிடுவதற்கான பயிற்சி ஆகியவை அடங்கும்.
அமேசான் இந்தியாவின் உலகளாவிய வர்த்தக இயக்குனர் பூபன் வாகங்கர், கூறுகையில், “விமனோவேட்டருடனான இந்த இணைப்பு மற்றும் இந்தியாவிலிருந்து உலகளாவிய பிராண்டுகளை உருவாக்க அவர்களின் 200 உறுப்பினர்களுக்கு திட்டரீதியாக உதவுவதற்கான சாத்தியம் குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து 20 பில்லியன் டாலர் ஈ-காமர்ஸ் ஏற்றுமதியை செயல்படுத்துவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை நோக்கி நாங்கள் பணியாற்றுவதால், அமேசான் இந்தியாவில் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் ஏற்றுமதிகளை எளிதாகவும் அணுகக்கூடியதாகவும் மாற்றுவதைத் தொடர்வதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்” என்றார்.
விமனோவேட்டர் நிறுவனர் திரிப்தி சிங்கால் சோமானி கூறுகையில், “ விமனோவேட்டரில், பெண் தொழில்முனைவோரின் முழு திறனை உணர தேவையான ஆதாரங்களுடன் குளோபல் ரோட்ஷோ, கிரியேட்டர்ஸ் ஃபெஸ்ட், 100 பவர் விமன் மற்றும் இன்குபேஷன் மற்றும் ஆக்சிலரேஷன் புரோகிராம் போன்ற எங்களின் முக்கியமான முயற்சிகள் மூலம் பில்லியன் கணக்கான பெண்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்றார்.