விப்ரோ கன்ஸ்யூமர் கேர் உடன் இணையும் நடிகை கீர்த்தி சுரேஷ்விப்ரோ கன்ஸ்யூமர் கேர் மற்றும் லைட்டிங், அதன் பாரம்பரிய சோப் பிராண்டான சந்திரிகா ஆயுர்வேதிக் சோப்பை, நடிகை கீர்த்தி சுரேஷ் இடம்பெறும் புத்தம் புதிய விளம்பரப் பிரச்சாரத்துடன் மீண்டும் அறிமுகம் செய்கிறது. இந்த புதிய விளம்பரப் பிரச்சாரத்துடன், சந்திரிகா ஆயுர்வேதிக் சோப் கீர்த்தி சுரேஷை அதன் புதிய பிராண்ட் அம்பாஸிடராக அறிமுகப்படுத்துகிறது மற்றும் நவீன மற்றும் நேர்த்தியான புதிய பேக்கேஜிங்கை வெளியிடுகிறது. புதிய சந்திரிகா ஆயுர்வேத சோப், நாடு முழுவதும் உள்ள பொது வர்த்தகம், நவீன வர்த்தக கடைகள் மற்றும் இ-காமர்ஸ் தளங்களில் ரூ. 32 என்ற விலையில் கிடைக்கும்.

ஓகில்வி கருத்தாக்கம் செய்துள்ள இந்த விளம்பரப்படம், கீர்த்தி சுரேஷ் தனது கார் நடுரோட்டில் பழுதடைந்ததால் கல்லூரி பேருந்தில் பயணம் செய்வதை காட்டுகிறது. அவள் பேருந்தில் ஏறியதும், பேருந்தில் உள்ள கல்லூரி பெண்கள் அவரது சருமம் எவ்வளவு அழகாக இருப்பதை கண்டு வியக்கிறார்கள். திரையிலும் திரைக்கு வெளியிலும் எப்படி இவ்வளவு பொலிவையும் மற்றும் பிரச்சனை இல்லாத சருமத்தை கீர்த்தி பராமரிக்கிறார் என்று ஒரு பெண் ஆச்சரியப்படும் போது, கீர்த்தி தனக்கும் சரும பிரச்சினைகள் இருந்ததாகவும், ஆனால் இப்போது அவரது சருமம் தெளிவாகவும் பொலிவாகவும் இருக்கிறது என்று பதிலளிகிறார். "எப்படி இப்படி" என்று கேட்க, இது உங்கள் சரும பிரச்சனையை தடுத்து, தேங்காய் எண்ணெய் மற்றும் 7 ஆயுர்வேத மூலிகைகளின் இருமடங்கு சக்தியுடன் அதன் இயற்கையான பொலிவை தருகிறது என்று அவர் சந்திரிகா ஆயுர்வேத சோப்பை காட்டுகிறார்.

நீரஜ் காத்ரி, இந்தியா மற்றும் தெற்காசியாவிற்கான விப்ரோ கன்ஸ்யூமர் கேர் வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், “80 ஆண்டுகளுக்கும் மேலாக பல்லாயிரக்கணக்கான இந்தியர்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு பிராண்டாக, சந்திரிகா ஒரு தனித்துவமான பிராண்டாகும். புதிய விளம்பரப்படமானது, கீர்த்தியுடன் இணைத்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் சருமத்தை உள்ளே இருந்து பராமரிக்கும் நம்பகமான பிராண்டை வழங்குவதில், நமது முன்னோக்கிய பயணத்தின் ஒரு வெளிச்சம்” என்றார்.

எஸ் பிரசன்னா ராய், விப்ரோ நுகர்வோர் பராமரிப்பு மற்றும் லைட்டிங் இன் சந்தைப்படுத்தலின் துணைத் தலைவர், கூறுகையில், “அற்புதமான புதிய விளம்பரப்படம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், சந்திரிகாவுடன் அழகான மற்றும் பொலிவான சருமத்தின் புதிய சகாப்தத்திற்கு நாம் செல்லும்போது, கீர்த்தி சுரேஷை சந்திரிகா குடும்பத்திற்கு வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்

நடிகை கீர்த்தி சுரேஷ் கூறுகையில், "நான் ஆயுர்வேதத்தின் நீண்டகால ரசிகை, மற்றும் சந்திரிகா ஆயுர்வேத சோப், கடந்த 80 ஆண்டுகளில் அறிவியல், பாதுகாப்பான மற்றும் பயனுள்ள அதன் இயற்கையான அணுகுமுறையுடன் ஆயுர்வேதத்தின் சாரத்தை அழகாகப் பற்றிகொண்டு நிர்வகித்துள்ளது. இந்த பார்ட்னர்ஷிப் மூலம், ஒரு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கும், மேக்கப்புடன் அல்லது இல்லாமலேயே பெண்கள் தங்கள் மிளிரும், ஆரோக்கியமான சருமத்தை வெளிப்படுத்தும் சூழலை உருவாக்கவும் நான் எதிர்நோக்குகிறேன்” எனத் தெரிவித்தார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form