ஹயரின் புதிய வாஷிங்க் இயந்திரம் அறிமுகம்



ஹயர் நிறுவனம் கனிமப் படிவுகளைத் தடுக்கும் ஆண்டி ஸ்கேலிங்க் தொழில்நுட்பமுள்ள 8கிலோ மற்றும் 9கிலோ திறன் கொண்ட டாப் லோடிங்க் வாஷிங்க் எந்திரங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஹயர் புதிய வாஷிங்க் எந்திரங்களின் வரிசை இப்போது இந்தியா முழுவதும் கிடைக்கும். ஆண்டி ஸ்கேலிங்க் தொழில்நுட்பம் கொண்ட டாப் லோடிங்க் வாஷிங்க் எந்திரங்களுக்கு 5 வருட விரிவான பொறுப்புறுதியும், மோட்டார் மீது 12 வருட பொறுப்புறுதியும் வழங்கப்படும்.   மாடல் எண் எச்எஸ்டபிள்யு80-678இஎஸ்8, 8 கிலோ எந்திரம் ரூ.43,000க்கும் மாடல் எண் எச்எஸ்டபிள்யு90-678இஎஸ்8, 9 கிலோ ரூ.46,000/-க்கு கிடைக்கும்

ஹயர் புது ரக டாப் லோட் வாஷிங்க் எந்திரங்களில் உள்ள ஆண்டி ஸ்கேலிங்க் தொழில்நுட்பம், டிரம்மை 20 ஸ்மார்ட் நேனோ பந்துகள் மூலம் சுத்தப்படுத்தும்.  உட்புற மற்றும் வெளிப்புற டப் சுவர்களின் மீது 1 வாஷ் சுழற்சிக்கு 25 மில்லியன் முறைகள் என்ற கணக்கில், தண்ணீர் வேகமாக பாய்ந்து தேய்துச் சுத்தப்படுத்தும். ஹயர் மேம்பட்ட ஒருங்கிணைந்த தீர்வான 3டி ரோலிங்க் வாஷ் ஆழமான சுத்தத்துக்கு உறுதி அளிக்கிறது. புதுமையான ‘வீனஸ் வேல்வ்ட்’ வடிவமைப்பு துணிகள் புத்தம் புதிதாகவும், சுத்தமாகவும் நீடித்து நிலைக்கப் பஞ்சை கிரகித்துக் கொள்கிறது. டாப் லோடிங்க் வாஷிங்க் எந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சென்ஸ் அதாவது ஃபஸ்ஸி லாஜிக் தொழில்நுட்பம், துணிகளின் எடையை உணர்ந்து, தானியாகவே சரியான தண்ணீர் அளவைத் தேர்ந்தெடுக்கிறது. க்விக் வாஷ் அம்சத்துடன் இணைந்து 15 நிமிடங்களில் துணிகளைத் துவைக்கிறது.

 நியர் ஜீரோ அழுத்தத் தொழில்நுட்பம் 0.01 எம்பிஏ தண்ணீர் அழுத்தத்திலும் செயல்படும். அதிக தளங்களைக் கொண்ட அடுக்கு மாடிக் குடியிருப்புகளிலுள்ள சேமிப்புத் தொட்டிகளின் குறைந்த தண்ணீர் அழுத்தம் மற்றும் குறைந்த உயரம் ஆகியவற்றைக்  கருத்தில் கொண்டே இது வடிவமைக்கப்பட்டுள்ளது.  கூடுதலாக, ஸ்மூத் மற்றும் சீம்லெஸ் பில்லோ டிரம் துணிகளுக்குத் தேவியான மென்மையான பாதுகாப்பை வழங்கும்.  2.2மீமீ அளவுள்ள 720 டீவாட்டரிங்க் துளைகள் மற்றும் கான்வெக்ஸ் பில்லோக்கள் மென்மையாக வருடுவது போல் இயங்குவதால், வாஷிங்க் எந்திரம் துணிகளைத் துவைக்கும் போது அவற்றைச் சேதப்படுத்தாது. மின் வெட்டுகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்த ஆட்டோ ரீஸ்டார்ட் தொழில்நுட்பம் ஹயர் புதிய டாப் லோடிங்க் வாஷிங்க் எந்திரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. எர்கோனோமிக் ரியர் கண்ட்ரோல்  பேனல் 1460 கோணத்தில் அமைக்கப்பட்டுள்ளதால், பயனீட்டாளர்கள் அதிகம் குனிய வேண்டிய அவசியமில்லை.

புதிய டாப் லோடிங்க் வாஷிங்க் எந்திரங்கள் அறிமுகம் குறித்து ஹயர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைவர் சதீஷ் என் எஸ் கூறுகையில் ‘‘இந்தியாவில் தயாரிக்கப்பட்ட’ மற்றும் ‘இந்தியாவுக்காகத் தயாரிக்கப்பட்ட’ புத்தம் புது வாஷிங்க் எந்திரங்கள் வரிசை மூலம், தொழிற்துறையிலேயே முதல்முறைத் தொழில்நுட்பத்தையும், முழுமையான வாஷிங்க் அனுபவத்தையும் வழங்குகிறோம். புதிய தலைமுறைத் தொழில்நுட்ப ஆற்றலில் இயங்கும் வாஷிங்க் எந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ஸ்மார்ட் அம்சங்களுடன் கூடிய கண்கவர் ஸ்டைலையும் தருகிறது. இந்திய இல்லங்களுக்கு முன்னுரிமை அளிப்பதே எங்கள் தொடர் முனைவாகும். ஒவ்வொரு இந்தியனின் சலவை அனுபவத்தை அதிகரிக்கும் வகையில் வாடிக்கையாளர் விரும்பும் அம்சங்களைத் தொடர்ந்து வழங்குவோம்’ என்றார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form