இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் அதிகம் பார்வையிடப்படும் வேலைவாய்ப்பு வலைத்தளமும், வளர்ந்துவரும் கல்வித்-தொழில்நுட்ப பிராண்டான ப்ரெப்இன்ஸ்டா, முன்பு எக்ஸாம்லி நிறுவனத்தில் பணியாற்றிய ராம்குமார்.ஜி -யை ‘நேஷனல் லீட் - ஸ்ட்ராடெஜிக் அலையன்சஸ்’ பதவியில் நியமித்ததாக அறிவித்துள்ளது. ராம்குமார்.ஜி - கல்வித்-தொழில்நுட்பத் துறையில் பயிற்றுவித்தல், விற்பனை, வர்த்தக செயல்பாடுகள், பார்ட்னர்ஷிப்கள் அண்ட் கூட்டணிகளைக் கையாளுவதில் 9 வருட தொழில்துறை நிபுணத்துவம் கொண்ட ஒரு அனுபவமிக்க தொழில்முறை வல்லுநர் ஆவார்.
இந்த புதிய பதவியின் மூலம் ப்ரெப்இன்ஸ்டா கல்வித்-தொழில்நுட்ப பிராண்டிற்கு புதிய பி2பி கிளையன்ட்களை இணைப்பதிலும், தக்கவைப்பதிலும் உதவுவதே ராம்குமாரின் முக்கிய பொறுப்பாகும். அத்துடன், திறன் மேம்பாட்டு சேவைகளை பெறுவதற்கு அனைவரும் நாடும் ஒரே தளமாக ப்ரெப்இன்ஸ்டாவை மாற்றும் பொறுப்பையும் அவர் ஏற்கவுள்ளார். உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி மேலாண்மை குழுவினர் தங்களது மாணவர்களுக்கு ப்ரெப்இன்ஸ்டாவின் தயாரிப்பான ‘ப்ரெப்இன்ஸ்டா பிரைம்’-இன் கீழ் வழங்கப்படும் சமகால புத்தம் புதிய தொழில்நுட்ப படிப்புகள் மற்றும் சான்றிதழ் படிப்புகள் கிடைப்பதை எளிதாக்கும் வகையில் - அறிவார்ந்த நிறுவனக் கூட்டணிகளை உருவாக்குவதையும் அவர் கவனிப்பார்.
ப்ரெப்இன்ஸ்டா நிறுவனத்தின் இணை-நிறுவனர், மற்றும் சிஎம்ஒ, . மனீஷ் அகர்வால் பேசுகையில், “எங்களது ப்ரெப்இன்ஸ்டா குடும்பத்திற்கு ராம்குமார்.ஜி அவர்களை வரவேற்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். ராம்குமார் நிறுவனங்களின் ஒருங்கிணைப்பை வளர்ப்பதிலும், கல்வியில் சிறந்து விளங்குவதை முன்நடத்துவதிலும் வெற்றி கண்ட ஒரு திறமைமிகு முன்னோடி ஆவார். எங்களது நிறுவன செயல்பாடுகளை விரிவுபடுத்தி, எங்கள் வாடிக்கையாளர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நாங்கள் திருப்திகரமாக நிவர்த்தி செய்து வரும் இந்த சூழலில், எங்களுக்குக் கிடைத்துள்ள அவருடைய வர்த்தக நுண்ணறிவு விலைமதிப்பற்றதாக இருக்கும் என்பதால் அவருடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்”, என்று தெரிவித்தார்.
“ ப்ரெப்இன்ஸ்டா நிறுவனம் அதன் அறிவார்ந்த வளர்ச்சித் திட்டத்தின் மூலம் அடைந்த வேகமான வளர்ச்சியை எனது துறைசார் அனுபவத்தைப் பயன்படுத்தி இன்னும் மேம்படுத்தவும், எட்-டெக் தொழில்துறையில் முன்னோடியாக இந்த பிராண்டின் நிலையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச்செல்லவும் நான் எதிர்நோக்கியுள்ளேன்,” என்று ப்ரெப்இன்ஸ்டா நிறுவனத்தின், நேஷனல் லீட்- ஸ்ட்ராடெஜிக் அலையன்சஸ், ராம்குமார்.ஜி தெரிவித்தார்.