இந்தியாவின் முதன்மையான திறன் பயிற்சி நிறுவனமான மணிப்பால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமி, இந்தியாவின் முன்னணி செல்வத்-தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் உடன் இணைந்து, முதல் நாளே வேலைக்குத் தயாராக இருக்கும் வகையில் ஆளெடுக்கவும் பயிற்சியளிக்கவும் உள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், மணிப்பால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமி மும்பை, டெல்லி, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, குர்கான், ஹைதராபாத், அகமதாபாத், மற்றும் புனே ஆகிய இடங்களில் ஐசிஐசிஐ செக்யூரிட்டிகளில் சேர 0 முதல் 2 வருட அனுபவத்துடன் 500க்கும் அதிகமான மாணவர்களை ஆள் எடுத்து பயிற்சி அளிக்கும்.
கல்வி, தொழில் திறன் இடைவெளியைக் குறைக்கும் வகையில், இந்த 60 நாள் தீவிர ஆன்லைன் திட்டம், விற்பனைக் கூட்டாளிகள், உதவி மேலாளர்கள் மற்றும் சீனியர் உறவு மேலாளர்கள் உட்பட பல்வேறு பணிகளுக்கு, தொழில்துறைக்குத்தயாரான அறிவு மற்றும் தொழில்நுட்ப அறிவுடன் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு மெய்நிகர் பயிற்சி, நவீன பாடதிட்டம் ஆகியவை மாணவர்களுக்கு விரைவான மற்றும் சுறுசுறுப்பான ஆனால் ஆழமான கற்றலுக்கான நெகிழ்வுத்தன்மையைக் கொடுக்கும். தொழில்நுட்ப மற்றும் சேவை திறன்களுடன், மென் திறன் பயிற்சியும் அளிக்கப்படும்.
இக்கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த மணிப்பால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமை வணிக அதிகாரி ராபின் பௌமிக், “எங்கள் கூட்டாண்மை மூலம், மூலதனச் சந்தைகள், வர்த்தகம் மற்றும் தனியார் செல்வ மேலாண்மை ஆகியவற்றில் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய, திறமையான மனித ஆற்றலுடன் அளவிடக்கூடிய வளர்ச்சியை ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸிற்கு ஊக்குவிப்போம் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.
ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் மனிதவளத் தலைவர் நிதி கஜாரியா “இந்த முயற்சியில், மணிப்பால் குளோபல் ஸ்கில்ஸ் அகாடமி, இளைஞர்களின் ஆற்றல் மற்றும் செக்யூரிட்டிகள் மற்றும் செல்வ மேலாண்மைத் துறையில் தேவைப்படும் திறமையான திறன் ஆகியவற்றுக்கு இடையே உள்ள இடைவெளிகளைக் குறைப்பதற்கான எங்கள் அனுபவமிக்க மற்றும் நம்பகமான பங்குதாரராக செயலாற்றவுள்ளது” என்று கூறினார்.