புதிய விற்பனையாளர்களுக்கு அமேசானின் தள்ளுபடி சலுகை



இந்த 2023-ஆம் ஆண்டில் தங்களது இணையவழி வர்த்தகத்தைத் துவங்கியுள்ள புதிய விற்பனையாளர்களுக்கு உதவுவதற்காக, ஜனவரி 15 முதல் ஏப்ரல் 14, 2023 வரை Amazon.in தளத்தில் பதிவு செய்யும் அனைத்து புதிய விற்பனையாளர்களும், 60 நாட்களுக்கு பரிந்துரை கட்டணத்தில் 50% தள்ளுபடியை பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்று Amazon.in நிறுவனம் அறிவித்துள்ளது. Amazon.in ஆன்லைன் சந்தைத் தளத்தில் விற்பனை செய்யும் வசதியினை ஏற்படுத்தித் தருவதற்காக Amazon நிறுவனத்திற்கு விற்பனையாளர்கள் செலுத்தவேண்டிய கட்டணமே ரெஃபரல் கட்டணம் (பரிந்துரைக் கட்டணம்) எனப்படுகிறது. இந்த பரிந்துரைக் கட்டணத்தில் 50% தள்ளுபடியை வழங்குவதன் மூலம், இணையவழி வர்த்தகத்திற்கு புதிதாக வரும் விற்பனையாளர்களை ஊக்குவிப்பதே Amazon-இன் நோக்கமாகும்.

ஈ-காமர்ஸ் எனப்படும் ‘இணையவழி வர்த்தகத்திற்குப் புதிதாக வரும்’ தொழில் நிறுவனங்களுக்கு பரிந்துரைக் கட்டணத்தில் வழங்கப்படும் இந்த 50% தள்ளுபடியானது குறிப்பிடத்தக்க அளவில் ஆதாயம் அளிப்பதாக இருக்கும். புதிதாக வரும் தொழில் நிறுவனங்களின் முதற்கட்ட செலவுகளைக் குறைத்து, தங்களது தொழிலை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வழிவகுக்கும் இந்த முன்முயற்சியானது - போட்டி நிறைந்த இணையவழி வர்த்தக  சந்தையில் அவர்கள் நிலைபெற்று நிற்க உதவக்கூடும். 

Amazon இந்தியா நிறுவனத்தின், செல்லிங் பார்ட்னர்ஸ் சர்வீசஸ், இயக்குனர், அமித் நந்தா அவர்கள் இது குறித்து கூறுகையில், “புதிய ஆண்டு துவங்கும் இந்த தருணத்தில், Amazon.in மூலம் ‘ஈ-காமர்ஸ் தளத்திற்கு’ புதிதாக வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு ரெஃபரல் கட்டணத்தில் 50% தள்ளுபடியை வழங்குவது குறித்து அறிவிப்பதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம். சரியான வழிகாட்டுதல் மூலம் ஆதரவு அளித்தால் சிறு தொழில்கள் மேம்பட முடியுமென நாங்கள் நம்புகிறோம். ஆன்லைன் வர்த்தகப் பயணத்தின் ஆரம்பகட்ட செலவுகளை சிக்கனமாக்குவதன் மூலம், 2025-ஆம்  ஆண்டுக்குள் 10 மில்லியன் இந்திய சிறு தொழில் நிறுவனங்களை டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்கிற எங்கள் நிறுவனத்தின் நோக்கத்துடன் இந்த தள்ளுபடி முயற்சியும் ஒத்திசைந்துள்ளது”, என்று தெரிவித்தார்.

தற்போது Amazon இந்தியாவின் சந்தைத் தளத்தில் 1.2 மில்லியன் விற்பனையாளர்கள் அங்கத்தினராக உள்ளனர், மற்றும் Amazon நிறுவனம் துவங்கியுள்ள பல்வேறு திட்டங்கள், சேவைகள் மற்றும் முன்முயற்சிகளின் மூலமாக பயனடைந்தும் வருகின்றனர். Amazon.in தளத்தில் தங்களது தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளை விற்பனைக்குக் கொண்டுவரும் - உள்ளூர் கடைகள், பாரம்பரிய நெசவாளர்கள் மற்றும் கைவினைக் கலைஞர்கள், மகளிர் தொழில்முனைவோர், புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், மற்றும் டிஜிட்டல் தொழில்முனைவோர் உள்ளிட்ட அனைத்து அளவிலான தொழில் நிறுவனங்களும் இதில்  உள்ளன. 

Amazon இந்தியா நிறுவனமானது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், அருகாமையில் உள்ள உள்ளூர் ஸ்டோர்களுக்கு பல வகையான திட்டங்களையும் வழங்குகிறது; அவற்றின் மூலம் அத்தகைய ஸ்டோர்கள் தங்களது நேரடி ஆஃப்லைன் சேவைகளை ஒருங்கிணைக்கவும், Amazon.in தளத்தில் இணையவழியில் விற்பனை செய்யும் வாய்ப்பையும் அளிக்கிறது. Amazon தளத்தில் உள்ள லோக்கல் ஷாப்ஸ் (Local Shops) போன்றவை இதற்கே உரிய பிரத்தியேக திட்டங்களாகும்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form