பி&ஜி ஹெல்த் அறிமுகப்படுத்தும் விக்ஸ் ஈஸ்குயல் நேச்சுராஒரு நபரின் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் தூக்கம் அவசியம், ஆனால் இந்தியாவில் மில்லியன் கணக்கான மக்களுக்கு போதுமான தூக்கம் கிடைப்பதில்லை. பி அண்ட் ஜி ஹெல்த் உடன் கான்டாரின் இணைந்து நடத்திய ஈஸ்குயல் இண்டியா நேஷனல் ஸ்லீப் சர்வே, சராசரியாக 15 சதவிகித இந்தியர்கள் மட்டுமே இரவில் நன்றாக தூங்குகிறார்கள், கிட்டத்தட்ட 60 சதவிகித இந்தியர்கள் அவ்வப்போது தூக்கமின்மையை எதிர்கொள்கின்றனர் என்று தெரிவிக்கிறது. தூக்கமின்மை பிரச்சனைகளுக்கு தீர்வு காண பி அண்ட் ஜி ஹெல்த் இந்தியா விக்ஸ் ஈஸ்குயல்நேச்சுராவை அறிமுகப்படுத்தியுள்ளது. விக்ஸ் ஈஸ்குயல்நேச்சுரா - உலகின் நம்பர் 1 ஸ்லீப் எய்ட் பிராண்டின் தயாரிப்பான  மெலடோனின் ஸ்லீப் சப்ளிமெண்ட் - இது போதைப்பொருள் அல்லாத ஸ்லீப் சப்ளிமெண்ட் ஆகும்.

இது எப்போதாவது ஏற்படும் தூக்கமின்மைக்கு ஏற்றது.  2023 ஜனவரி முதல் நாடு முழுவதும் உள்ள பெரிய மருந்துக்கடைகள், வெகுஜன மற்றும் நவீன சில்லறை விற்பனைக் கடைகளில்  விக்ஸ் ஈஸ்குயல்நேச்சுரா கிடைக்கிறது. இதில் உள்ள வைட்டமின் பி6 சோர்வு மற்றும் களைப்பைக் குறைக்க உதவுகிறது. இது  அமேசான், ஃபிளப்கார்ட், ப்ளிங்இட், 1எம்ஜி பிஜி ஷாப் போன்ற சில ஆன்லைன் போர்ட்டல்களிலும் கிடைக்கும். 10 மெல்லக்கூடிய கம்மிகள் ரூ. 199 மற்றும் 24 கம்மிகள் ரூ. 449 என்ற அதிகபட்ச சில்லறை விலையில் கிடைக்கிறது.

வெளியீட்டு விழாவில் பேசிய பி அண்ட் ஜி ஹெல்த் நிறுவனத்தின் மூத்த சந்தைப்படுத்தல் இயக்குநர் சாஹில் சேத்தி ”ஈஸ்குயல் இண்டியா நேஷனல் ஸ்லீப் சர்வே” இந்தியர் எப்படி தூங்குகிறார்கள்  என்பது பற்றியும், முக்கியமாக தூக்கமின்மை குறித்த குறைந்த அளவிளான விழிப்புணர்வு மற்றும் அதைக் கையாளும் விதம் பற்றிய முக்கியமான புள்ளிவிவரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. 10 இந்தியர்களில் 6 பேர் எப்போதாவது தூக்கமின்மையை எதிர்கொள்வதால், இந்தியா 2வது அதிக தூக்கம் இல்லாத நாடாக உள்ளது. எங்கள் நுகர்வோரின் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை நிவர்த்தி செய்ய இந்தியாவில், ஹவுஸ் ஆஃப் விக்ஸ்-இன்  நியூ விக்ஸ் ஈஸ்குயல்நேச்சுரா-வை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.  

ஈஸ்குயல் ஸ்லம்பர்ஃபீஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய பிரபல விருந்தினரும் நடிகையுமான சோனம் கபூர் அஹுஜா, “ இது என்னைப் போன்ற பல பொறுப்புகளை ஏற்று நடத்தும் நிலையிலிருபவர்களின் வாழ்க்கையை மிகவும் மகிழ்ச்சியானதாக்கும் என்றும், நான் எனது உடற்தகுதியைத் திரும்பப்பெற, எனது தனித்தன்மையை மீண்டும் பெற  விக்ஸ் ஈஸ்குயல்நேச்சுரா எனது தூக்கத்தை ஒழுங்குபடுத்துவதில் எனக்கு உதவி செய்யும் என்றும் நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.

பிஅண்ட்ஜி ஹெல்த்தின், மருத்துவம் அண்ட் தொழில்நுட்ப விவகாரங்களுக்கான குழுத் தலைவர் அண்ட் விஞ்ஞானி டாக்டர் யோங்சியாட் வோங் கூறுகையில், “மெலடோனின் மற்றும் வைட்டமின் பி6 உடன் கலந்த,  விக்ஸ் ஈஸ்குயல்நேச்சுரா கம்மி என்பது உங்கள் உடலின் இயற்கையான மெலடோனின் உற்பத்திக்கு துணைபுரியும் ஒரு ஊட்டச்சத்து மருந்து ஆகும்.  இது நீங்கள் விரைவாக தூங்குவதற்கு உதவுவதுடன்  தூக்கமின்மையை எதிர்த்து போராடவும், சோர்வை நீக்கவும் உதவும்” எனத் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form