கூடுதல் எரிபொருள் திறன் வழங்கும் புதிய ஜேகே டயர்கள் அறிமுகம்நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்கும், சுத்தமான போக்குவரத்தை  ஆதரிப்பதற்கும் அதன் முயற்சியில், இந்திய டயர் வணிக முதன்மையாளரான ஜேகே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ், இந்தியாவின் நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகன (எம் அண்ட் எச்சிவி) வகைக்கான  எரிபொருள் திறன் கொண்ட டயரை, இந்தியாவின்  போக்குவரத்து நகரமான  நாமக்கல் நகரத்தில்  அறிமுகப்படுத்தியது.  புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெட்வே ஜேயுஎச் எக்ஸ்எப் மற்றும் ஜெட் ஸ்டீல் ஜேடிஇ எக்ஸ்எப் ஆகியவை இந்த எக்ஸ்எப் (கூடுதல் எரிபொருள் திறன்) வரம்பாகும். மேலும் அவை நீண்ட தூர இழுவையாற்றல் மதிப்பிடப்பட்ட சுமை பயன்பாடுகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டில் லாரிகள் மூலம் பொருட்களை கொண்டுசெல்பவர்கள் , வாகனத்தின் இயக்க செலவுகளை அதிகரிக்கின்ற, எப்போதும் அதிகரித்து வரும்  எரிபொருள் செலவுகளால் சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நிறுவனமாக, ஜே.கே டயர் இந்தத் தேவையைக் கண்டறிந்து, அடுத்த தலைமுறை கலவைகளைப் பயன்படுத்தி அதி-குறைந்த உருட்டல் எதிர்ப்புக் குணகத்துடன் (ஆர்ஆர்சி) கட்டப்பட்ட ஆற்றல் திறன் கொண்ட எக்ஸ்எப் வரம்பை உருவாக்கியுள்ளது, இது எரிபொருள் செலவில் 10 சதவீதம் வரை சேமிக்க உதவுகிறது. இந்த டயர்கள் இயக்கச் செலவுகளைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.

ஜே.கே டயர் அண்ட் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் (இந்தியா) அனுஜ் கதுரியா பேசுகையில், "சிவி சந்தையில் முன்னோடியாக இருப்பதால்,  எரிபொருள் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படும் தொழில் எங்கள் டிரக்கிங் தொழில் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். நெருக்கத்தில் பிஎஸ்6 கட்டம் 2 மாசு உமிழ்வு விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவதன் மூலமும், அதிகரித்து வரும் டீசல் விலையும் அவற்றின் செயல்பாட்டுச்செலவுகளை மேலும் அதிகரிக்கும். ஜே.கே டயரில், நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எப்போதும் முன்னணியில் இருந்துவருகிறோம். மேலும் எங்கள் புதிய ஜெட்வே ஜேடிஎச் எக்ஸ்எப் மற்றும் ஜெட்ஸ்டீல் ஜேடிஇ எக்ஸ்எப் ஆகியவை தொழில்துறை புரட்சிகரமான, சுற்றுச்சூழலுக்கு உகந்த, நிலையான மற்றும்  எரிபொருள் செலவைக் கணிசமாகக் குறைக்க உதவுகிற தயாரிப்புகள் ஆகும்."என்று கூறினார்.

போக்குவரத்து வணிகத்தின் மையமாக நாமக்கல் உள்ளது. மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட போக்குவரத்து சமூகத்துடன், நாமக்கல்லின் டிரான்ஸ்போர்ட்டர்கள் போக்குவரத்து துறையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பத்தை தொடக்கத்திலேயே ஏற்றுக்கொண்டவர்கள். இந்த சந்தையில் தங்கள் எரிபொருள்-திறனுள்ள தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், ஜே.கே டயர் அதன் வாடிக்கையாளர் மைய அணுகுமுறையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது.

Post a Comment

Previous Post Next Post

Contact Form