பிரிட்டானியா மேரி கோல்டின் மை ஸ்டார்ட்அப் முன்னெடுப்பு மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து, இந்திய இல்லத்தரசிகள் தங்களது தொழில் முனைவு பயணத்தினை துவங்குவதற்கு தேவையான நிதி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்கியுள்ளது.
அதன் இரண்டாவது சீசனில், என்எஸ்டிசி-உடன் இணைந்து மேற்கொண்ட முயற்சியின் மூலம் 10,000 இல்லத்தரசிகளுக்கு அடிப்படை தகவல் தொடர்பு திறன் பயிற்சி, தகவலை அணுகுவதன் மூலமாக பெறப்படும் நிதியறிவு பயிற்சி மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப பயிற்சி ஆகியவற்றுடன், சமூக மற்றும் பொருளாதார சுய-சார்புக்காக சிறு தொழில் முனைவு திறன் பயிற்சியும் அளிக்கப்பட்டது. அதன் சீசன் 3-இல், பிரிட்டானியா மேரி கோல்ட் மை ஸ்டார்ட்-அப் முன்னெடுப்பில், இல்லத்தரசிகள் தங்கள் தொழில்களை வளர்க்க இணையத்தைப் பயன்படுத்த உதவுவதற்காக பயிற்சிகளை விரிவுபடுத்தியது. மாம்ஸ்பிரெஸ்ஸோ உடனான இந்தியன் ஹோம்மேக்கர்ஸ்’ ஆண்ட்ரப்ரனர்ஷிப் ரிப்போர்ட் 2021-இன் படி, தங்கள் சொந்த தொழிலை நடத்த விரும்பிய 77 சதவீத இல்லத்தரசிகள், இந்தப் பயணத்தில் தொழில்நுட்பத்தை முக்கிய உதவியாகக் கருதியது தெரியவந்தது.
இந்த சீசன் 4-இன் சிறப்பம்சங்களில் ஒன்று - அனைத்து பங்கேற்பாளர்களும் கூகுளின் விமென்வில் திட்டத்தினை அணுகும் வசதியைப் பெறுவார்கள். இது ஒரு ஆர்வத்தை வர்த்தகமாக மாற்றுவது, நிறுவனத்தை நிர்வகித்தல் மற்றும் அதன் வளர்ச்சிக்கான முயற்சிகளில் ஈடுபடுவது போன்றவற்றை "எப்படி" மேற்கொள்வது என்கிற பாடத்திட்டத்துடன் கூடிய வர்த்தகக் கல்வித் திட்டமாக உள்ளது. தங்களது கற்கும் பயணத்தை நிறைவு செய்யும் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். போட்டியின் முழு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.britanniamystartup.com வலைதளத்தில் காணலாம்.
பிரிட்டானியா மேரி கோல்டின் மை ஸ்டார்ட்அப் போட்டி 4.0 குறித்து பேசிய, பிரிட்டானியா இண்டஸ்ட்ரிஸ் லிமிடெட்டின், தலைமை மார்க்கெட்டிங் அலுவலர், அமித் தோஷி “ மேரி கோல்ட் மை ஸ்டார்ட்அப் முன்முயற்சியின் மூன்று வெற்றிகரமான சீசன்களை நடத்தியதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இதனைத் தொடர்ந்து, இந்தியா முழுவதிலுமிருந்து சாதிக்கும் உத்வேகமுள்ள 4 மில்லியன் பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் கிட்டத்தட்ட 60 சதவீத விண்ணப்பங்கள் மெட்ரோ அல்லாத பகுதிகளிலிருந்து பெறப்பட்டவையாகும். இந்த ஆண்டு, கூகுள் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்று கூறினார்.
பிரிட்டானியா உடனான கூட்டு முயற்சி பற்றி பேசிய, கூகுள் இந்தியா நிறுவனத்தின், கூகுள் கஸ்டமர் சொல்யூஷன்ஸ் பிரிவின், இயக்குனர், ஷாலினி புச்சலபள்ளி, “தொழில்கள் வளர தொழில்நுட்பம் உதவும் - ஆனால் அந்த தொழில்களை வழிநடத்தும் மற்றும் அதில் பணிபுரியும் நபர்கள் சரியான திறன்களைக் கொண்டிருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.எங்கள் தயாரிப்புகள் மற்றும் தளங்கள் மற்றும் விமென்வில் போன்ற திறன் வளர்ச்சித் திட்டங்கள் மூலம் பெண்கள் சமூகத்தை அவர்களின் பயணங்களில் ஆதரிக்கும் எங்களது உறுதிப்பாட்டின் பின்னணியில் உள்ள உத்வேகமாகவும் இதுவே உள்ளது. பிரிட்டானியாவின் மை ஸ்டார்ட்அப் போட்டியின் மூலம் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இந்தப் பாடத்திட்டத்தை ஹோம்ப்ரீனர்கள் (இல்லத்தரசி-தொழில்முனைவோர்) எனப்படும் புதிய சமூகத்திற்கு வழங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மற்றும் பங்கேற்பாளர்கள் அனைவரும் வெற்றிபெறவும் வாழ்த்துகிறோம்,” என்று தெரிவித்தார்.