ஏயு ஸ்மால் ஃபைனாஸ் பாங்க் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் இணைந்து பாங்கஷ்யூரன்ஸ் ஒப்பந்த அறிவிப்பு

 


இந்தியாவின் முன்னணி ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் மற்றும் முன்னணி ஆயுள் காப்பீட்டு நிறுவனமான ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆகியவை 2022 டிசம்பர் 16 அன்று பாங்கஷ்யூரன்ஸ் வணிக மாதிரி மூலம் ஹெச்டிஎஃப் லைஃப் காப்பீட்டுப் பாலிசி திட்டங்களை வழங்கக் கார்பொரெட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தக் கூட்டாண்மை மூலம் ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கியின் பல்வகை வாடிக்கைகாளர்களின் நிதிப் பாதுகாப்புத் தேவைகளை நிறைவு செய்ய, ஹெச்டிஎஃப்சி லைஃப் ஆயுள் காப்பீட்டுப் பாலிசிகளின் அணுக்கத்தை வழங்கும்.

வாடிக்கையாளர்கள் சேவைகளுக்கு டிஜிட்டல் தளம் மற்றும் ஹெச்டிஎஃப்சி லைஃப் டச் பாயிண்ட்கள் அணுக்கத்தை இயலச் செய்வதன் மூலம், வங்கியின் ஆயுள் காப்பீட்டுப் பாலிசிக்களை மேலும் வளப்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.புதுமையான கண்டுபிடிப்பு, நிலைத்தன்மை மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்ததை வழங்குவது ஆகியவற்றில் இரு நிறுவனங்களும் உறுதியாக உள்ளதால், இந்தக் கூட்டாண்மை ஆயுள் காப்பீட்டுப் பொருள்களின் ஊடுருவலை இன்னும் ஆழமாக்குவதுடன்,  வாடிக்கையாளர்களுக்கு உயரிய மதிப்பையும் வழங்கும்.

கூட்டாண்மை குறித்து ஹெச்டிஎஃப்சி லைஃப் மேலாண் இயக்குனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி விபா படல்கர் கூறுகையில் ‘ஹெச்டிஎஃப்சி லைஃப் நிறுவனத்திலுள்ள நாங்கள் இந்திய மக்களுக்கு நிதிப் பாதுகாப்பை வழங்கும் தெளிவான நோக்கத்தைக் கொண்டிருக்கிறோம். புதிய மற்றும் நீண்ட காலக் கூட்டாண்மைகளை உருவாக்கும் போது எங்களது விநியோக வலைப்பணியும் விரிவடைகிறது. ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்கின் நீண்ட கால அனுபவம் எங்கள் முனைவுகளை மேலும் வலுப்படுத்தி, அதிக எண்ணிக்கையில் தனி நபர்களுக்குக் கணிசமான நிதிப் பாதுகாப்பை வழங்குமென நம்புகிறோம்’ என்றார்.

வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும் பலன்கள் பற்றி ஏயு ஸ்மால் ஃபைனான்ஸ் பாங்க் மேலாண் இயக்குனர் மற்றும் முதன்மைச் செயல் அதிகாரி சஞ்சய் அகர்வால் கூறுகையில் ‘நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவு ஆகியவற்றை விரிவுபடுத்த ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்ற எண்ணினோம். இந்தக் கூட்டாண்மை எங்கள் பொருள்கள் மற்றும் சேவைகளுக்கு மதிப்பு கூட்டுவதுடன்,  வாடிக்கையாளர் நன்கு திட்டமிடவும் உதவும். ஆயுள் காப்பீட்டுத் துறையில் நீண்ட அனுபவம் கொண்ட பிரபல பிராண்டாக ஹெச்டிஎஃப்சி லைஃப் விளங்குவதால், எங்கள் மதிப்பு மிக்க ஆயுள் காப்பீட்டுக் கூட்டாளியாக அதை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்’ எனத் தெரிவித்தார்.


Post a Comment

Previous Post Next Post

Contact Form