2023இல் வளர்ச்சியை அதிகரிக்க ஸ்கோடா ஆட்டோ இந்தியா முடிவு

 


கடந்த 2022இல் மிகப் பெரிய விற்பனையைச் சாதித்த ஸ்கோடா ஆட்டோ இந்தியா ‘வேகப்படுத்தும் வளர்ச்சி’ என்னும் இலக்குடன் 2023ஆம் ஆண்டுக்கான நோக்கத்தை வெளிப்படையாக அறிவித்துள்ளது.  2023இல் ஸ்கோடா ஆட்டோ இந்தியா பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகள், வலையமைவு விரிவாகத் திட்டங்கள், வேகப்படுத்தும் வளர்ச்சி இலக்கு ஆகியவற்றின் மூலம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியா முழுவதும் தனது வலையமைவு விரிவுபடுத்துவதுடன், நாட்டின் புதிய நகரங்களிலும் தடம் பதிக்கத் திட்டமிட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு இந்தியா 2.0 கீழ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ஸ்கோடா குஷாக் எஸ்யூவி குளோபல் நியூ கார் அசஸ்மெண்ட் திட்டத்தின் (ஜிஎன்சிஎபி) கீழ் முழுமையான 5 நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றது. 2023இல் பாதுகாப்பு அம்சங்களைப் பொருத்தவரை அனைத்து அட்டவணை மதிப்பீட்டிலும் குஷாக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.இந்தியா 2.0 திட்டத்தின் கீழ் ஸ்கோடா ஆட்டோவின் இரண்டாவது தயாரிப்பான ஸ்லேவியா செடானும் நாட்டின் பிரிமியம் மிட்-சைஸ் செடான் பிரிவைச் சேர்ந்ததாகும். குஷாக் போன்று அதே 5-நட்சத்திர அந்தஸ்துள்ள பாதுகாப்புத் தளத்தில் தயாராகி, எஸ்யுவி போல் 179எம்எம் க்ரவுண்ட் க்ளியரன்ஸுடன்,  செடான் எழிலையும் தக்க வைத்துள்ளது. 2021 ஜூலையில் அறிமுகமான குஷாக் எஸ்யூவி மற்றும் 2022 மார்ச்சில் அறிமுகமான ஸ்லேவியா ஆகியவை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணிகளாக விளங்கின. இந்தக் கார்கள் இந்தியா 2.0 திட்டத்தின் ஓர் அங்கமாக, இந்தியாவில் உருவான எம்க்யூபி-ஏஓ-இன் தளத்தில் உலகுக்காகத் தயாரானவை.

உரிமைச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதுடன், வாடிக்கையாளரை மையப்படுத்துதல், வாடிக்கையாளர் திருப்தி ஆகியவற்றை மேம்படுத்த அனைத்து வாடிக்கையாளர் டச் பாயிண்ட்களிலும் முக்கிய நடவடிக்கைகளை தொடங்க நிறுவனம் முனைந்துள்ளது. பணிமனைத் திறன் அதிகரிப்பு, விரிவான பழுது நீக்கும் தரம், அனைத்தையும் உள்ளடக்கிய பணிமனைகள் உருவாக்கம், நடமாடும் வாகன சேவை எல்லைகள் விரிவாக்கம், விற்பனைக்குப் பிந்திய செயல்முறைகளை இலக்கமயமாக்கல் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கு 2022ஆம் ஆண்டு ‘மிகப் பெரிய ஆண்டாக’ அமைந்த நிலையில், 2023இல் தனது வளர்ச்சிப் பயணத்தை வேகமாக முன்னெடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஸ்கோடா ஆட்டோ இந்தியா பிராண்ட் இயக்குனர் பீட்டர் சோல்க் கூறுகையில் ‘2022இல் இந்தியாவில் முதல் முறையாக 50,000 விற்பனை இலக்கைத் தாண்டி 53,721 கார்களை விற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறோம்.  2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த விற்பனை இரு மடங்காகும். எங்கள் பிராந்திய மற்றும் தேசிய அளவிலான வளர்ச்சியும் அதிகரித்ததன் காரணமாக 2022ஆம் ஆண்டு அனைத்துப் பிரிவுகளிலும் ‘மிகப் பெரிய ஆண்டாக’ விளங்கியது. பல்வேறு தயாரிப்பு நடவடிக்கைகள் மூலம் வேகமான வளர்ச்சியை நோக்கி எங்கள் பாதையைக் கட்டமைக்கவும், இந்தியா 2.0 பொருள்களை நன்கு நிறுவவும், நிலையான வலையமைவு வீச்சைப் பெறவும், வாடிக்கையாளர் திருப்தியில் தீவிர கவனம் செலுத்தவும், மூலோபாயத் திட்டமுடன் ஐசிஇ மற்றும் இவி பிரிவுகளில் தயாரிப்புகளை விரிவுபடுத்தவும் முனைந்துள்ளோம்’ என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form