இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளரான கோவில்பட்டி லாயல் டெக்ஸ்டைல் நிறுவனம், திருமண இணையதளமான மேட்ரிமோனி.காம் சேவை நிறுவனத்துடன் இணைந்து ஜோடி செயலியைஅறிமுகப்படுத்தியுள்ளது. சுமார் 7,500-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் நலனை கருதி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஜோடி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவில்பட்டியில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஜோடி செயலியை லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வள்ளி எம்.ராமசாமி தொடங்கி வைத்தார். திருமண இணையதளமான மேட்ரிமோனி.காம் நிறுவனர் மற்றும் தலைமைச்செயலர் முருகவேல் ஜானகிராமன் உடனிருந்தார்
ஜோடி செயலியில் லட்சக்கணக்கான மணமகள், மணமகன்கள் சுய விவரங்கள் உள்ளன. அதில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தொடங்கி டிப்ளோ முடித்து பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், டெக்னிசியன்கள், சில்லரை வர்த்தக ஆண் விற்பனையாளர்கள், பெண் விற்பனையாளர்கள், எலக்ட்ரீசியன், டிரைவர்கள், சமையலர்கள், டெலிவரி செய்பவர்கள், டெலி காலர்கல், பி.பி.ஓ. தொழிலாளர்கள், பாதுகாவலர் என பலரும் அடங்குவர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஜோடி செயலி மூலம், லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் வரம்பற்ற பிரிமீயம் திட்டம் மூலம் தங்களுக்குப் பிடித்த வரன்களை சுயவிவரங்களை பார்த்து தேர்வு செய்ய முடியும். ஜோடி செயலி மூலம் சிறப்பு வாடிக்கையாளர் உதவி வாட்ஸ் அப் மற்றும் தொலைபேசி சேவை தமிழ் மற்றும் இதர இந்திய மொழிகளில் கிடைக்கும்.
ஜோடி செயலியைத் தொடங்கி வைத்து பேசிய லாயல் டெக்ஸ்டைல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் முழு நேர இயக்குநர் வள்ளி எம்.ராமசாமி, “மேட்ரிமோனி.காம் அமைப்புடன் இணைந்து லாயல் நிறுவனம் ஜோடி செயலியை அறிமுகப்படுத்தியதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த செயலி மூலம் விரிவான தரவுகள் குறித்த விவரங்கள், நன்றாக சரிபார்க்கப்பட்ட பதிவாளர்கள் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் அல்லது தங்கள் குழந்தைகளுக்கு பொருத்தமான வரன்களை தேட முடியும். ஜோடி செயலி தமிழ் மொழியில் இருப்பதால், செயலியை பயன்படுத்தும் பயனர்கள், அவர்களின் குடும்பத்தினருக்கு எளிதாக கையாள முடியும்” என்றார்.
மேட்ரிமோனி.காம், நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி முருகவேல் ஜானகிராமன் பேசுகையில், நாங்கள் லாயல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஒவ்வொரு இந்தியருக்கும் பொருத்தமான வாழ்க்கை துணையை கண்டுபிடிக்க உதவுவது முக்கிய நோக்கமாகும். அந்தவகையில் ஜோடி செயலி டிஜிட்டல் தளத்தில் இடைவெளியைக் குறைப்பதில் முக்கிய பாலமாக செயல்படுகிறது. வாழ்க்கையின் குறைந்த எஸ்இசி - களை பிரதான இடத்திற்கு கொண்டு வருவதற்கும், வாழ்க்கை-திருமணத்தில் சிறந்த தேர்வுகளை அடைய எளிய தொழில்நுட்பத் தீர்வுகளை தருவது முயற்சியாகும். ஜோடி செயலியை எளிதாகப் பயன்படுத்தலாம். அதில் உள்ள ஆண்களின் சுயவிவரங்கள் அனைத்தும் முழுமையாக சரிபார்க்கப்பட்டுள்ளது. மேலும், தனி நபர் தகவல்கள் பாதுகாப்பானவை என்பதை உறுதி செய்ய முடியும் என்றார்.