மதுரையில் உம்மிடி பங்காரு ஜூவல்லரியின் தங்கம், வைர நகைகளின் கண்காட்சி


  இந்தியாவின் நம்பகமான நகை தயாரிப்பாளரான உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ், மதுரையில் 2024 அக்டோபர் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டலில் இரண்டு நாள் விற்பனை கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது. இதில் புதுமையான மற்றும் அனைத்து வயதினரையும் ஈர்க்கும் நகைகள் காட்சிபடுத்தப்படும். மதுரையின் கலாச்சார பாரம்பரியத்தை மனதில் கொண்டு நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தங்கம் மற்றும் வைர நகைகளின் தொகுப்பை காண மதுரை மக்கள் அனைவரும் வரலாம்.

வாடிக்கையாளர்கள் தங்கம், வைரம் மற்றும் சாலிட்டர் உள்ளிட்ட பல்வேறு பண்டிகை சேகரிப்புகளைப் பார்வையிடலாம். மதுரை வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளையும் வழங்குகிறது. தங்கம், வைரம் மற்றும் விலையுயர்ந்த கற்கள் வாங்கினால் அதன் செய்கூலி மற்றும் சேதாரத்தில் 20% சிறப்புச் சலுகையும், ஒவ்வொரு சொலிடருக்கும் 3 முதல் 5 சதவிதம் தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. இந்த கண்காட்சியின் மூலம் விபிஜே-ன் உலகத் தரம் வாய்ந்த கைவினைத்திறனை அதன் மதுரை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இரண்டு நாட்களுக்கு காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை பொதுமக்கள் கண்காட்சியை பார்வையிடலாம். இக்கண்காட்சி வரவிருக்கும் பண்டிகை காலத்திற்காக சிறப்பாக நடத்தப்படுகிறது.

கண்காட்சி குறித்து உம்மிடி பங்காரு ஜூவல்லர்ஸ் நிர்வாக பங்குதாரர் அமரேந்திரன் உம்மிடி பேசுகையில், “எங்கள் நகை தொகுப்பை மதுரைக்கு கொண்டு வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம். செழிப்பு, பாரம்பரியம் மற்றும் காலத்தால் அழியாத அழகு ஆகியவற்றைக் குறிக்கும் தங்கம் எப்போதும் தமிழ் கலாச்சாரத்தில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. ’ஏதென்ஸ் ஆஃப் ஈஸ்ட்’ என அழைக்கப்படும் மதுரை கலைகளில் சிறந்து விளங்கியதற்கான வரலாறு உண்டு. இதில் தங்க கைவினைத்திறன் ஒரு மிக முக்கிய பகுதியாக இருந்துள்ளது. மதுரையிலும், தமிழகத்தின் பிற நகரங்களிலும் நாங்கள் நடத்திய முந்தைய கண்காட்சிகளில் நல்ல வரவேற்ப்பை பெற்றோம். எங்களின் பண்டிகைக் கலெக்ஷனை மதுரையில் காட்சிப்படுத்த ஆவலுடன் உள்ளோம்” என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Contact Form