தந்தேராஸ்-இன் மகிழ்ச்சியான கொண்டாட்டத்தை வெளிப்படுத்தும் வகையில், ஓரா நிறுவனத்தின் நவீன வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நகைகள் பிரத்தியேகமான சேகரிப்போடு வெளிவந்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் பாரம்பரியமான நகைகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்யும் விதமாக பாரம்பரிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட நகைகள் மட்டுமல்லாமல், சமகால வடிவமைப்பின் அழகான வெளிப்பாடை வெளிப்படுத்தும் விதத்திலும் புதிய நகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. சிக்குவின் புடவை, பட்டுப் புடவைகள் என எவ்வித பாரம்பரிய உடைகளை அணிந்தாலும் ஓரா பைன் நகைகள் பொருந்தக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளன.
தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக ஓரா ஃபைன் ஜுவல்லரி தங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேக சலுகைகளை அளித்துள்ளது. இதில் வைர நகைகளுக்கு 25 விழுக்காடு வரை தள்ளுபடி, வைர வளையல்களுக்கு 20 விழுக்காடு தள்ளுபடி, தங்க நகைகள் செய்யும் கட்டணத்தில் 25 விழுக்காடு தள்ளுபடி, பூஜ்ஜியம் விழுக்காடு வட்டியில் இஎம்ஐ மற்றும் பழைய தங்க நகைகளுக்கு பூஜ்ஜியம் விழுக்காடு விளக்கு ஆகிய சலுகைகளை அளிக்கும்.
இது குறித்து ஓரா பைன் ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் திபு மேத்தா கூறுகையில், ஓராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகைகள், இந்தியாவின் கலாச்சார முக்கியத்துவத்தை மையப்படுத்தி தயாரித்து உள்ளது. இந்த புதிய சேகரிப்புகள் பாரம்பரிய கைவினை திறனை நவீன வடிவமைப்புடன் தயாரிக்கப்பட்டுள்ளது. ஓராவின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகைகள் எதிர்வரும் பண்டிகை நாட்களை மேலும் சிறப்பாக கொண்டாட வாடிக்கையாளர்களை முன்னோக்கி செல்லும். தீபாவளி மற்றும் தந்தேரேஸ் பண்டிகைகளின் பாரம்பரியத்துக்கு ஏற்ப இளம் வாடிக்கையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்ட திட்டங்களையும் ஓரா வடிவமைத்து உருவாக்கியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு அசத்தலான சேகரிப்புகளை தள்ளுபடி விலையில் பெரும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது” என்றார்.