தமிழ்நாட்டைத் தனது முக்கியச் சந்தையாக மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், 'டாடாவின் தயாரிப்பான' கேரட்லேன் (CaratLane), இந்த பண்டிகைக் காலத்தில் இரண்டு சிறப்புப் பண்பாட்டு கேம்பைன்களைத் தொடங்கியுள்ளது. ஒன்று, நடிகை காயடு லோஹர் நடித்துள்ள 'ஆடி பெருக்கு' கேம்பைன்; மற்றொன்று 'வரமகாலக்ஷ்மி' கேம்பைன். தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீடுகளிலும் இடம்பெறும் பாரம்பரியங்கள் மற்றும் அன்றாட உறவுகளை அடித்தளமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் பண்பாட்டு நாட்காட்டிக்கு ஏற்ப, இங்குள்ள மக்களுக்காகவே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கதைகள் மூலம் தொடர்பு கொள்வதில் கேரட்லேன் தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதை இந்த இரட்டை கேம்பைன்களும் பறைசாற்றுகிறது.
ஆடிப் பெருக்கு: அன்பு செலுத்தும் மகளின் தருணம்
தாய்-மகள் இடையிலான அன்பான உறவின் பின்னணியில் உருவாகியுள்ள ஆடிப் பெருக்கு கேம்பைன் வீடியோ, நெகிழ்ச்சியான அன்பு பரிமாற்றத்தைப் படம்பிடித்துக் காட்டுகிறது. பல ஆண்டுகளாகத் தாயால் அன்போடு பராமரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட காயடுவின் கதாபாத்திரம், அதே அன்பைத் தாய்க்குத் திரும்பச் செலுத்துவதற்கான வாய்ப்பை காட்சிப்படுத்துகிறது. தாயின் கழுத்தில் ஒரு இயற்கை வைர நெக்லஸை அணிவிக்கும் போது, "ஒவ்வொரு ஆடியிலும் நீங்கதான் என்னை தயார் பண்ணுவீங்க, இப்போ என்னோட முறை" என்று அவர் கூறுகிறார். தங்களைச் செதுக்கிய உறவுகளைக் கௌரவிக்கும் தருணமாக ஆடியைக் கொண்டாடும் கேம்பைன் வீடியோ ஆனது, தங்கம் மற்றும் வைரங்களை அந்தப் பிணைப்புகளைப் போலவே பிரகாசிக்கும் நீடித்த நினைவுகளாக மாற்றுகிறது.
வரமகாலக்ஷ்மி: ஒவ்வொரு வீட்டின் நிஜ லட்சுமி
வரமகாலக்ஷ்மி பூஜைக்குத் தயாராகும் ஒரு நவீன தென்னிந்தியக் குடும்பத்தின் பின்னணியில் அமைந்த இந்த வீடியோ, லட்சுமி தேவிக்கு நகைகளை அணிவிக்குமாறு தாய் தன் மகனிடம் கேட்பதோடு தொடங்குகிறது. இதில் ஒரு ஜாலியான திருப்பமாக, அவன் தன் மனைவியையே வீட்டின் உண்மையான லட்சுமியாகக் கருதி, அன்போடு அவளை அலங்கரிக்கத் தேர்ந்தெடுக்கிறான். கேரட்லேனின் சிறப்பான கதைசொல்லும் பாணிக்கு ஏற்ப, இந்த வீடியோ மனித உறவுகளை மையப் புள்ளியாகக் கொண்டுள்ளது. நகைகள் முக்கியத்துவத்தை ஆக்கிரமிக்காமல், உணர்வுப்பூர்வமான அந்தத் தருணத்தை அமைதியாகக் கூட்டுகின்றன - பண்டிகைகள் தேவியைக் கௌரவித்தாலும், ஒவ்வொரு வீட்டின் லட்சுமியும் தினமும் கொண்டாடப்பட வேண்டியவர் என்ற எண்ணத்தை உறுதிப்படுத்துகிறது.
இந்த இரண்டு கேம்பைன் குறித்துப் பேசிய கேரட்லேன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சௌமன் பௌமிக் (Saumen Bhaumik): "எங்களது பண்டிகைக் கால கலெக்ஷன்களுக்கும் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு. இந்த பண்டிகைக் காலத்தில் ஒரு கதைக்கு பதிலாக இரண்டு கதைகள் மூலம் அதைக் கௌரவிக்க விரும்பினோம். ஆடி மற்றும் வரமகாலக்ஷ்மி ஆகிய இரண்டும் குடும்பப் பிணைப்புகளையும், நம் வாழ்க்கையைச் செதுக்கியவர்களையும் கொண்டாடும் தருணங்களாகும் - எப்போதும் நம்மை அன்புடன் அரவணைப்பவர்கள் மற்றும் தினமும் அமைதியாக நம் வீடுகளைச் செழுமைப்படுத்துபவர்கள் ஆகியோரைக் கொண்டாடும் நேரமிது. தங்கம் மற்றும் வைரங்கள் பெரும்பாலும் வாழ்க்கையின் மிக அர்த்தமுள்ள தருணங்களைக் குறிக்கின்றன. மேலும், அன்போடும் நன்றியுணர்வோடும் வழங்கப்படும் பரிசுகளே என்றென்றும் நினைவில் நிற்கக்கூடியவை என்பதை இந்த வீடியோக்கள் நமக்கு நினைவூட்டுகின்றன," என்று கூறினார்.
வரமகாலக்ஷ்மி கேம்பைன் குறித்து BBH இந்தியா நிறுவனத்தின் தலைமை ஆக்கப்பூர்வ அதிகாரி பரீக்ஷித் பட்டாச்சார்யா (Parikshit Bhattacharya) கூறுகையில்: "மிகவும் சக்திவாய்ந்த பண்பாட்டுக் கதைகள் பெரும்பாலும் நம் கண்ணெதிரேதான் மறைந்திருக்கின்றன. ஒவ்வொரு வரமகாலக்ஷ்மி பண்டிகையின்போதும், குடும்பங்கள் தேவியை அன்போடு நகைகளால் அலங்கரிக்கின்றோம். 'வீட்டின் லட்சுமியையும் அதே பக்தியோடு கொண்டாடினால் என்ன?' என்று எங்களையே நாங்கள் கேட்டுக்கொண்டோம். அந்தச் சிறிய மாற்றம் எங்களுக்கு ஒரு ஜாலியான, பண்பாட்டில் வேரூன்றிய மற்றும் உணர்வுப்பூர்வமாக எதிரொலிக்கும் ஒரு கதையைக் கொடுத்தது. அதே வேளையில், கொண்டாட்டத்தின் மையத்திற்குள் கேரட்லேனின் நகைகளையும் இயல்பாகக் கொண்டுவந்தது," என்றார்.
இரண்டு கேம்பைன் வீடியோக்களுக்கான லிங்க் :
● Aadi Perukku - <https://www.youtube.com/watch?v=T15LubTiKPA>
● Varamalakhshmi - <https://www.youtube.com/watch?v=W6cXbSsDOLs>
இயற்கை வைரம், தங்கம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டிற்கான நகைகளின் பரந்த கலைப்படைப்புகளுடன், கேரட்லேன் இரண்டு கொண்டாட்டங்களுக்கும் உகந்த அர்த்தமுள்ள பரிசளிப்பு கலெக்ஷன்களை வழங்குகிறது. தற்போது இந்நிறுவனம் அனைத்து வகையான நகைகளின் வைர விலையில் 30% வரை தள்ளுபடி வழங்குகிறது. வாடிக்கையாளர்கள் இந்தத் தொகுப்புகளைத் தங்களுக்கு அருகிலுள்ள கேரட்லேன் கடைகளிலோ அல்லது கேரட்லேன் செயலி (App) மற்றும் இணையதளத்திலோ பார்வையிடலாம்: www.caratlane.com <https://www.caratlane.com>.
